பக்கம்:நீதிதேவன் மயக்கம்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீதிதேவன் மயக்கம் சப்தரிஷிகளின் விரும்பினீர். பத்தினிமார்களை 53 அல்லவா யாகம் காணச் சென்றீர், மோகம் கொண்டு விட்டீர் யாகத்தில் ஈடுபட்டிருந்த சப்தரிஷிகள் மனைவிமார் மீது- இந்திரியங்களை அடக்கியதால் இந்தத் தேவ பதவி பெற்றீர் - உம்மை வணங்கி வரம் கேட்டனர் தவசிகள். நீரோ, காமம் கக்கும் கண்களுடன் ரிஷி பத்தினிகளைப் பார்த்தபடி நின்றீர். அவர்களைக் கற்பழிக்கத் திட்டமிட்டீர்... உண்டா? இல்லையா? அக்னி:ஏதோ ஒரு வகையான மன மயக்கம். - இரா : உமக்கு! வரம் அருளப் போன இடத்திலே நீர் காமப் பேயானீர் - பெயரோ தேவன் - புகழோ அபாரம் செயலோ, மிக மிக மட்ட ரகமானது- அக்னி தேவனே! யாகங்களை அழித்தனர் அரக்கர் என்கிறார்களே. அவர்கள் கூட அவ்வளவு ஈனத்தனமாக நடந்து கொண்டதில்லை. நீதிதேவா! யாக குண்டங்களருகே இது போன்ற ஆபாசங்கள் அனந்தம் -யாகம் பகவத் ப்ரீதிக்கான காரியம் என்று வியாக்யானம் கூறுகிறார். கம்பர்? இந்த யாகங்களில் இலட்சணம் இப்படி இருக்கிறது! யாகங்களுக்குச் சென்று வரம் அருளப் போகும் தேவர்களின் செயல் இவ்விதம் இருக்கிறது. அக்னி: மன மயக்கம் என்றுதான் கூறினேனே! இரா:உமக்கு மன மயக்கம் ஏற்படலாமா? யாக குண்டத்தருகே அமர்ந்திருந்த ரிஷி பத்தினிகளிடம் ஏற்பட்டதே மன மயக்கம் கண்டித்தனரா - தண்டித்தனரா - தேவ பதவியை இழந்தீரா? -இல்லையே - காமந்தகார சேட்டை புரிந்தீர் புரிந்தும், அக்னி தேவனாகவே கொலு வீற்றிருக்கிறீர் - என்னையோ, இந்தக் கம்பர் -