பக்கம்:நீதிதேவன் மயக்கம்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 அறிஞர் அண்ணா. அரக்கனாக்கினார் = என் ராஜ்யம் அழிந்தது தர்ம சம்மதம் என்று வாதாடுகிறார். நான் அரக்கன்! ஆனால் நான் செய்ததில்லை, தாங்கள் செய்யத் துணிந்த அக்கிரமத்தை... ஆரியர்கள் செய்யும் யாகங்களைப் பற்றி, நான் எப்படி மதிப்பு கொள்ள முடியும்? இந்த யாகங்களில் பிரசன்னமாகும், அக்னி போன்ற தேவர்களிடம் நான் எப்படி மதிப்பு காட்ட முடியும்? ஆகவேதான், யாகங்களை அழித்தேன். ரிஷி பத்னிகளைக் கூடக் கற்பழிக்கத் துணியும் இந்தத் தேவர்கள், என்னை இழித்தும், பழித்தும் பேசலாமா? இவர்களின் அக்ரமத்தை அம்பலப்படுத்த யாரும் கிளம்பாததாலேயே இவர்களுக்கும் இவர்களின் புகழ் பாடிப் பூரிப்படையும் இந்தப் புலவருக்கும், என்னைக் கண்டிக்கத் துணிவு பிறந்தது. கூப்பிடுங்கள் ஒவ்வொரு தேவனையும் அவரவர்களின் அக்ரமச் செயலை,ஆதாரத்தோடு எடுத்துக் கூறுகிறேன் மறுக்க முடிகிறதா இந்த மகானுபாவர்களால் என்று பார்ப்போம். [நீதிதேவன், கவலை கொண்டவராகி, சபையைக் கலைத்து விடுகிறார்.] நீதி: இன்று இவற்றுடன் நீதிமன்றம் கலைகிறது. பிறகு கூடுவோம். காட்சி - 9 [நீதிதேவனும், இராவணனும் வந்து கொண்டிருக் கின்றனர்]

இரா:நீதிதேவா! இரக்கம் எனும் ஒரு பொருளிலா அரக்கன் இது என் மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டு. என் மீது மட்டுமல்ல, பலரால், பல பேர் மீதும் இக்குற்றச்சாட்டு,