பக்கம்:நீதிதேவன் மயக்கம்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 அறிஞர் அண்ணா உள்ளமோ, துக்கத்தையோ, பயத்தையோ தாங்கும் நிலையிலே இல்லை. இந்த நிலையிலே என்னைக் காட்டுக்குத் துரத்துவது தர்மமா? நியாயமா? துளியாவது இரக்கம் காட்டக் கூடாதா? அழுத கண்களுடன் நின்று அவ்விதம் கேட்டேனடி அகல்யா! என் நாதரிடம். அசோக வனத்திலே கூட அவ்வளவு அழுத்தில்லை. அவனிடம் பேசினபோது கூட, என். குரலிலே அதிகாரம் தொனித்தது; மிரட்டினேன், இவரிடம் கெஞ்சினேன். ஒரு குற்றமும் செய்யாத நான் - இரக்கம் காட்டச் சொல்லி இரவிகுலச் சோமனைக் கேட்டேன். சீதா! நான் ராமன் மட்டுமல்ல ராஜாராமன்! - என்றார். ராஜாராமன் என்றால் மனைவியைக் காட்டுக்கு அனுப்புமளவு கல் நெஞ்சம் இருக்க வேண்டுமோ என்று கேட்டேன். அகல்யா! என் கண்ணீர் வழிந்து கன்னத்தில் புரண்டது. புயலில் சிக்கிய பூங்கொடி போல உடல் ஆடிற்று. என் நிலையை அந்த நேரத்தில் அரக்கனான இராவணன் கண்டிருந்தால் கூ., உதவி செய்வானடி ஆனால் நீ புகழ்ந்தாயே கருணாமூர்த்தி என்று, அவர், என் கண்ணீரைச் சட்டை செய்யவில்லை நான் பதறினேன்,கருணை காட்டவில்லை, காலில் வீழ்ந்தேன் -ஏதோ கடமை கடமை என்று கூறிவிட்டு, என்னைக் காட்டுக்குத் துரத்தினார். அப்படிப்பட்டவரை, தன் பிராண நாயகியிடம், ஒரு பாவமுமறியாத பேதையிடம், கர்ப்பவதியிடம், கடுகளவு இரக்கமும் காட்டாதவரை, அகல்யா! புத்தி கெட்டவளே! கூசாமல் கூறுகிறாய். இரக்கமுள்ளவரென்று. இனி ஒரு முறை கூறாதே; என் மனதை வேக வைக்காதே." - சீதை கோபமாகச் சென்று விட, அகல்யா திகைத்து நிற்கிறாள்.