பக்கம்:நீதிதேவன் மயக்கம்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 அறிஞர் அண்ணா கம்: மற்றவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பது பற்றி தான் ஏதும் அறியேன். நான் கூறுவது, குற்றவாளியெனக் கருதப்படுபவனுடன், தீர்ப்பு கூறுவோர் சுற்றிக் கொண்டிருப்பது, முறையல்ல, சரியல்ல என்று அவன் விளக்கம் கூற தங்களை அழைக்கிறான் என்றால், என்னையுமல்லவா, உடன் அழைத்து செல்ல வேண்டும்? தாங்கள் மட்டும் தனியாகச் செல்வது தவறல்லவோ? நீதி : குற்றம் சாட்டப்பட்டவனை, தனியாக விசாரிப்பதும். குற்றம் சாட்டியவர்களை தனியாக விசாரிப்பதும் பிறகு இருவரையும் வைத்து விசாரணை நடத்துவதும்; தீர்ப்புக் கூறுவோனின் முறை அல்லவோ? அது எப்படித் தவறாகும்? கம் : கடல் சூழ் உலகமெலாம், கவிச்சக்கரவர்த்தி எனப் போற்றப்படும் என்னையும், கருணையும், இரக்கமும் இல்லாத அரக்கனையும், ஒன்றாகவே கருதிவிடுகிறீரா. தேவா? ஏற்கெனவே அளிக்கப்பட்ட தீர்ப்பின் மீது, மறு விசாரணைக் கொள்வதே ஏற்றமுடையதாகாது. அப்படி எடுத்துக் கொண்ட மறுவிசாரணையில் குற்றவாளியின் பின்னால், தீர்ப்புக் கூறுவோர் சுற்றிக் கொண்டிருப்பது கற்றறிவாளர், ஏற்றுக் கொள்ள முடியாதது, தேவா நீதி : முற்றும் கற்றுணர்ந்தோர் முடிவு கூட கால வெள்ளத்தால், சரியானவை அல்ல என்று மறுதீர்ப்பளிக்கப் பட்டுள்ளன என்பதும் தாங்கள் அறியாததல்ல. கம்: நீதிதேவா ! தங்களை நிந்திக்க வேண்டுமென்பதோ, தங்கள் மீது மாசு கற்பிக்க வேண்டுமென்பதோ, எனது எண்ணமல்ல. எல்லாவித ஆற்றலும், அறிவும், திறனும் இருந்தது. ஆனால் அன்னை சீதா பிராட்டியாரை, அவன் சிறை வைத்ததும், கொடுமைப்படுத்தியதும், அவனது இரக்கம் இல்லாத அரக்க குணத்தால்தான் என்று நான் எடுத்துரைத்த தீர்ப்புக்கு தங்கள் தீர்ப்பு