பக்கம்:நீதிதேவன் மயக்கம்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீதிதேவன் மயக்கம் 63 மாறுபடுமானால், கவிச்சக்கரவர்த்தி கம்பர் மட்டுமல்ல, தேவரும், மூவரும், முனிவரும் பரிகசிக்கப்படுவர். எனவே தங்களைக் கேட்டுக் கொள்வதெல்லாம், இரக்கமில்லா கொடுமனம் படைத்தவன் தான் இராவணன், அரக்க குணம் படைத்தவன்தான் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை, என்ற தீர்ப்பையே நான் எதிர்ப்பார்க்கிறேன். சென்று வருகிறேன். தேவா. (கம்பர் போய் விடுகிறார்.] பணி : என்ன தேவா! இராவணனுடன் செல்வது, தகாது, கூடாது என்று கூறி விட்டு, கம்பர் தானே தீர்ப்பைக் கூறி, அதன்படி தீர்ப்பும் இருக்க வேண்டுமென்கிறாரே! இது என்ன வகையில் நியாயம் தேவா!. நீதி : இதுதான் நேரத்துக்கேற்ற, ஆளுக்கேற்ற நியாயம். இலங்காதிபதி, தீர்ப்பைப் பற்றிக் கவலைப் படவில்லை. கம்பர் தன் தீர்ப்பு குற்றமுடையது என்று கூறிவிடப் போகிறார்கள் என்று கவலைப்படுகிறார்.உம் பார்ப்போம். [காட்சி முடிவு] காட்சி - 13 இடம் : அற மன்றம் இருப் நீதிதேவன், இராவணன், கம்பர், விசுவாமித்திரர். நிலைமை : இராவணன் வாதாடுகிறான். கம்பர், அலட்சியமாக இருப்பது போல் பாவனை செய்கிறார். விசுவாமித்திரர் திகைப்புற்றுக் காணப்படுகிறார். இந்த வழக்கை விசாரிக்க வேண்டிய தொல்லை நமக்கு வந்து சேர்ந்ததே என்று நீதிதேவன் கவலைப்படுகிறார்.