பக்கம்:நீதிதேவன் மயக்கம்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீதிதேவன் மயக்கம் கம் 65 மன்னன் சுடலை மனைவி மாரடித்தழுகிறாள் காக்கின்றான் - பிணத்தை எட்டி உதைக்கிறான். ஏன் இரக்கம் காட்டவில்லை? தபோதனராயிற்றே! நான் தான் அரக்கன், இரக்கம் எனும் ஒரு பொருள் இல்லை இவருக்கு என்ன குறை! ஏன் இரக்கம் கொள்ளவில்லை? (காரணம், விளக்கம் அறியாமல் இராவணன் பேசுகிறான் என்று நீதிதேவனுக்கு எடுத்துக் காட்டும் போக்கில்] சத்ய சோதனையன்றோ அச்சம்பவம்! மூவுலகும் அறியுமே, முடியுடை வேந்தனாம் அரிச்சந்திர பூபதி சத்யத்தை இழக்கச் சம்மதிக்காமல், சுடலை காத்ததை சோத ைன்..சத்ய சோதனை.... இரா : ஆமய்யா ஆம் சத்ய சோதனைதான்! ஆனால் இங்கு நான் இரக்கம் ஏன் அந்தச் சமயத்திலே முனிவரை ஆட்கொள்ளவில்லை என்று கேட்கிறேன். விசு : அரிச்சந்திரனை நான் வாட்டி வதைத்தது, அவனிடம் விரோதம் கொண்டல்ல. இரா : விசித்திரம் நிரம்பிய வேதனை! காரணமின்றிக் கஷ்டத்துக்குள்ளாக்கினீர், காவலனை. இதயத்தில் இரக்கத்தை நுழைய விடாமல் வேலை செய்தீர்! விசு : அரிச்சந்திரன் பொய் பேசாதவன் என்பதை. இரா : தெரியுமய்யா - இரு தவசிகளுக்குள் சம்வாதம் - அதன் பயனாக நீர் ஓர் சபதம் செய்தீர், அரிச்சந்திரனைப் பொய் பேச வைப்பதாக.... விசு: ஆமாம் அந்தச் சபதத்தின் காரணமாகத்தான்... இரா : சர்வ ஞானஸ்தராகிய உமக்கு இரக்கம் எழ வேண்டிய அவசியம் கூடத் தெரியவில்லை.. விசு : அதனால் அரிச்சந்திரனுடைய பெருமைதானே அவனிக்கு விளங்கிற்று.