பக்கம்:நீதிதேவன் மயக்கம்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 அறிஞர் அண்ணா என்பதற்குச் சமாதானம் கூறுவார்கள் - நான் கூடக் கூறினேன் - என்னை அரக்கராக்கிய இந்த அறிஞரைக் கேட்கிறேன் - இவர்கள் யார்? அதோ, துரோணாச்சாரி எவ்வளவு இரக்கமுள்ள மனம், அவருக்கு மனதாலே, குருவாகப் பாவித்து பதுமை செய்து வைத்து வணங்கி, வேடர் திலகன் ஏகலைவனை, காணிக்கை கேட்டாரல்லவோ, கை கட்டை விரலா – வலது கையாகப் பார்த்து - எவ்வளவு. இரக்க சுபாவம்! ஏன் ஆச்சாரியராக்கப்பட்டார்? என்னை.. ஏன், அரக்கனாக்கினீர்?

துரோ [துடித்தெழுந்து] நான் கேட்டால், அவன் கொடுக்க வேண்டுமோ! நான் வெட்டியா எடுத்துக் கொண்டேன், அவன் கை கட்டை விரலை? இரா ; அவனுடைய தொழிலுக்கும் வில் வித்தைக்கும் எந்தக் கை கட்டை விரல் ஆதாரமோ, அதைக் கேட்டீர், காணிக்கையாக. துளியாவது மனதிலே இரக்கம் இருந்தால் கேட்பீரா! அவனாகத் தானே கொடுத்தான் என்று வாதாடுகிறீர். அவன் ஏமாளி அல்ல. உமது கொடுமை கால முழுவதும் உலகுக்குத் தெரியட்டும், ஒரு கட்டை விரல் போனாலும் பாதகமில்லை என்று எண்ணினான். துரோ : அவனாகக் கொடுத்தான் அவனாகவே தான் கும்பிட்டுக் கூத்தாடினான், குருவே, குருவே, என்று. இரா அந்த அன்பு கண்டு, நீர் உமது குணத்தைக் காட்டி. விட்டீர். கட்டை விரலைக் காணிக்கைக் கேட்டபோது என்ன எண்ணினீர் மனதில். அவன் மறுப்பானா மறுத்தால் அவனுடன் மல்லுக்கு, நிற்கலாம் கொல்லலாம் என்று சூதாக எண்ணினீர். துரோணாச்சாரியே, அவன் உம்மைத் தோற்கடித்தான். அவன் இழந்தது கைவிரல் - நீர் இழந்தது கண்ணியம், கவனமிருக்கட்டும் - இரக்கமற்ற நெஞ்சுடையவர் நீர்,