பக்கம்:நீதிதேவன் மயக்கம்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீதிதேவன் மயக்கம் 77 இரா : அதுதான் முக்கியம். இரக்கமற்ற செயல். சிவசொத்து, அந்த நெல், அதை யார் தின்றார்களோ அவர்க ளெல்லாம் சிவத் துரோகிகள். சிவத்துரோகிகளின் சிரத்தை வெட்டாது விடேன் என்று சீறினார் இந்தச் சிவபக்தர்... இல்லையா கோட்புலியாரே? சீறினார் சீவினார் தலைகளை... பர : பலரைச் சிரச் சேதம் செய்தார். மகாபாபம். ரொம்ப அக்ரமம் நான் தாயை மட்டும் தான் கொன்றேன். அதுவும் தகப்பன் பேச்சை எப்படித் தட்டி நடப்பது என்ற காரணத்தால். இரா : இவருக்கு யாரும் கட்டளையிடவில்லை தலைகளைச் சீவச் சொல்லி கொன்றார் கொன்றார், ஆண்களையும் பெண்களையும் கொன்றார், இரக்கம் துளியுமின்றிக் கொன்றார் - பதைக்கப் பதைக்கக் கொன்றார் வேண்டினர், கொன்றார். காலில் வீழ்ந்தனர், கொன்றார் கொன்று தீர்த்தார் சகலரையும் - தேவா! குற்றவாளி என்று என்னைக் கரைபடுத்திய கம்பரே! இவர் செய்தார் இக்கொடுமை விசாரணை உண்டா? இல்லை குற்றம் சாட்டவில்லையே குற்றம் சாட்டாதது மட்டுமா, இத்தனை கொலைகளைத் தன் பொருட்டு செய்தாரே, இந்தப் பக்த சிகாமணி என்று மகிழ்ந்து, கைலைக் குன்றி லுள்ள முக்கண்ணன், இவருக்கு அருள் பாலித்தார். நீதி : கொடுமைதான். - இரா அதுபோது, உயிருக்குப் பயந்து அந்த மக்கள் எவ்வளவு கெஞ்சி இருப்பர் கோட்புலியாரே? எம்மைக் கொல்லாதீர் - உமது காலில் வீழ்கிறோம், வேண்டாம் தயவு செய்க - எல்லாம் அறிந்தவரே! ஏழைகள் பால் இரக்கம் காட்டுக, என்று எவ்வளவு கெஞ்சியிருப்பர் என்னப்பா, அக்ரமம். அலறித் துடித்து அழுது புரண்டுதான் இருப்பர். கல்லும் உருகுமே அந்தக் கூக்குரலைக் கேட்டால்.. விசு :