பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 நீதிநெறிவிளக்கம் தாக்கணங்கும் ஆணவாம் பெண்மை யுடைத்தெனினும் : தாக்கணங்கு-இதற்கு அழகிற் சிறந்த இலக்குமி ' என்று பொருள்கொண்டு, ' குமரியைக் குமரி கூடி இன்பம் பெறுதல் கூடாமை யின் இலக்குமியுங் தான் ஆடவகைப் பிறந்து கூடி இன்பம் பெற விரும்பும் அத்துணைச் சிறப்புடைய தென்பது ' என உாைத்தார் அ. குமாரசாமிப் புலவர். " தாக்கணங்கு மாணவாம் ' என்பதற்குத் திருமகளினது மாட்சி மையை யுடையதாகிய வெனவும், கிருமகளும் அவாம் மாண்பெண்மை யெனவும், பொருள் கூறலாம்.' -சி. வை. தா.

  • தாக்கனங்கு - காமநெறியால் தீண்டி உயிர் கொள்ளும் தெய்வப் பெண். இலக்குமி என்று பொருள் கொள்வாருமுண்டு. அத் தெய்வப் பெண்ணும் தன் செயல்விட்டுக் காமங் கொள்ளும் அழகென்பது போல, இலக்குமி என்றதிற் பொருள் அவ்வாறு சிறவாமையால் அஃது உாையன் றென்க. ’’ கோ. இ.

" தாக்கணங்கு - காமநெறியால் ஆடவரைத் தீண்டி வருத்துவ தோர் தெய்வம். இதனை யுலக வழக்கில் மோகினிப் பசாசம் என்பர். நோக்கின னேக்கெதிர் நோக்குத முக்கணங்கு, தானைக்கொண் டன்ன துடைத்து ' எனத் திருக்குறளினும், மூப்புடை முதுமைய தாக்கணங் குடைய ' என மணிமேகலையினும், இச்சொல் பயின்றவருதல் காண்க. தாக்கணங்கும் என்னும் உம்மை உயர்வுசிறப்புப் பொருளது. ” - வி. கோ. இந்:

  • தாக்கு அணங்கும் பெண்மை எனறு சேர்த்து வினைத்தொகை யாகக் கொண்டு காக்கி வருத்துகின்ற பெண்மைத் தன்மை என்று உாை கூறுக. ” - இள.

இவ்வாறுாைத்து ஆண் அவாம் ' என்பதையும் அப்பெண்மையுடன் கூட்டி வினைத்தொகையாக்கி யுாைக்கும் உரை சிறவாமை காண்க. ஆண் அவாம்-' ஆண்மை - ஆளுங்தன்மை ; பெண்மை - கட் புலம்ை அமைதித்தன்மை ' என்பர் ஆசிரியர் நச்சினுர்க்கினியர்.

  • மிகப் பேரழகுவாய்ந்த மோகினித் கெய்வமும் தனது பெண் கன் மையை யடைவதற்கு விரும்புமாறு செய்யவல்ல கழிபேரழகுடைய பெண் கள் என்பார், தாக்கனங்கு மாணவாம் பெண்மை யுடைத்தெனினும் ” என்ருர். இக் கருத்தினைப், பெண்டிரு மாண்மை வெஃகும் பேதுறு முலையினளை ' என்னுஞ் சிந்தாமணிச் செய்யுளடியிற் காண்க. உயர்வு நவிற்சியணிபற்றி யிங்கனங் கூறினர். அவாம் - அவாவும் எனற்பாலது அவாம் என நின்றது. ” -வி. கோ. சூ.

' ஆண் அவாம் என்பது இடக்காடக்கல் ; பவ்வீ என்பது போல ” -இர. எல். ஜெ.