பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க.க. அரசச் செல்வ மயக்கம் 113 க.க. அரசச் செல்வ மயக்கம் முடிப்ப முடித்துப்பின் பூசுவ பூசி உடுப்ப வுடுத் துண்ட வுண்ணு-இடித்திடித்துக் கட்டுரை கூறிற் செவிக்கொளா கண்விழியா நெட்டுயிர்ப்போ டுற்ற பிணம். 1. முடிப்ப - முடித்தற்குரிய மலர் முதலியவற்றை, முடித்து - (தலையில்) முடித்துக்கொண்டும், பின் - அதன்பின், பூசுவ - பூசுதற்குரிய கலவைச் சாந்து முதலியவற்றை, பூசி - (மெய்யிற்) பூசிக்கொண்டும், உடுப்ப - உடுத்தற்குரிய ஆடை முதலியவற்றை, உடுத்து - அணிந்துகொண்டும், உண்ப - உண்ணு தற்குரிய உணவு வகைகளே, உண்ணு - (வயிருர) உண்டும், (உயிர்த்தன்மை காட்டி), இடித்திடித்து - (அமைச்சர் முதலா யிைேர்) பன்முறை நெருங்கிக் கழறிக் கழறி, கட்டுரை - (உறுதி பயக்கும்) அறிவுரைகளை, கூறின் - கூறினல், செவிக்கொளா-காது கள் (இருந்தும்) ஏற்றுக்கொள்ள மாட்டாமலும், கண்விழியா - கண்கள் (இருந்தும் எதிர்கிற்போரைத்) கிறந்து ஏறெடுத்துப் பாராமலும், (இருக்கின்ற இயல்பினையுடைய அரசரென்னும் உயிர்கள்), நெடு உயிர்ப்போடு - பெருமூச்சோடு, உற்ற - கட்டிய, பிணம் - பினங்களேயாம். 2. (கொண்டுகடட்டு வேண்டிற்றிலது.) 3. தக்கலமே குறியாகக்கொண்டு குடிநலம் ஒம்பாத அரசர் கள் கடைப்பினங்கள்ாவர். 4. இடிப்பாாை யில்லாத எமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும் ” -குறள்.

  • அரிசனம் பூசிமாலை யணிந்து பொன்னடை சாத்திப்

பரிசனம் பின்புசெல்லப் பாாகர் பரிக்கக் கொட்ட வரிசின்ன மூதத் தொங்கல் வங்கிட வுணர்வுமாண்டு பெரியவர் பேச்சுமின்றிக் கிடத்தலாற் பினத்தோ டொப்பர்.” -சிவஞானசித்தியார். 5. முடித்தல், பூசுதல், உண்ணல் ஆகிய உயிருள் பொருளின் தொழிற் பண்பும், செவிக்கொளாமை கண் விழியாமையாகிய உயிரில் பொருளின் தொழிற் பண்பும் உளாாயிருத்தலால், அவ்வாசர்களை, நெட்டு யிர்ப்போடுற்ற பினம்’ என்ருர்.” -வி. கோ. சூ. f முடிப்பதும் பூசுவதும் உடுப்பதுமான செயல்களெல்லாம் உயிரிருப் பதுபோற் காட்டுகின்றன. ஆனல் கேளாமையு ம் பாாாமையும் உயிரில்லா 15