பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 நீதிநெறிவிளக்கம் க.கூ. நன்கு மதிப்பு மாகஞ் சிறுகக் குவித்து நிதிக்குவை ஈகையி னேக்கழுத்த மிக்குடைய-மாகொல் பகைமுகத்த ஒள்வேலான் பார்வையிற் றீட்டும் நகைமுகத்த நன்கு மதிப்பு. 1. மாகம் - வானமும், சிறுக - சிறிதாகக் காணும்படி யாக, குவித்து - (பெரும் பொருட்குவை) குவித்து, கி.கிக்குவை - கிரண்ட பொருளை, ஈகையின் - (அள்ளி அள்ளிக்) கொடுத் தலினும், ஏக்கழுத்தம் - தலையெடுப்பை, மிக்கு - மிகுதியாக, உடைய - உடையனவாம் ; (எவையெனின்) மா - (விலங்கிற் பெரிய) யானையை, கொல் - கொல்லும், பகை - (அதன் பிறவி எதிரியாகிய) சிங்கத்தின், முகத்த - (வீரஞ்செறிந்த) பார்வை அமைந்த, ஒள் - ஒளிபொருங்கிய, வேலான் - வேற் படையை யுடைய அரசன், பார்வையில் - (கன் நுண்புலகிைய) அருட் பார்வையால், தீட்டும் - (வரைந்து வைத்ததுபோ ற்) காட்டிச் செய்யும், நகை - மகிழ்ச்சிநகையோடுகட்டிய, முகத்த - முகத் தானியன்ற, நன்குமதிப்பு - நன்குமதிக்கற்பாடுகள். 2. மாகொல் பகை முகத்த ஒள்வேலான், மாகஞ் சிறுகக் குவித்து நிதிக்குவை ஈகையின், பார்வையில் தீட்டும் நகை முகத்த நன்கு மதிப்பு ஏக்கழுத்தம் மிக்குடைய. 3. அரச வீகையினும் அறிவுசெறிந்த அரச நன்குமதிக்கற் பாடே சிறந்ததாம். Jo 4. துண்ணிய மென்பா ரளக்குங்கோல் காணுங்கால் கண்ணல்ல தில்லை பிற.” -குறள். 5. வெள்வேலா னென்றமையின் அாச னென்பது கொள்ளப் படும். அவனது நன்குமதிப்பினல் பலருடைய பாராட்டும் கல்லுதவியும் பெறுதலின் ஈகையினுஞ் சிறந்த தென்ருர்.” -உ. வே. சா. .

  • அரசனிடத்திலே அளவற்ற பெரும் பொருளைப் பரிசாகப் பெறு வதிலும் அவனலே நன்குமதிக்கப்படும் பேறு பெறுதல் ஒருவர்க்கு மிக்க இறுமாப்பினைக் கொடுக்கும். அாசன்பால் குறையிாந்து கிற்கும் ஒருவ னுக்கு அவ்வரசன் அளவற்ற பொருட் குவியலை அளிக்கிருன் என வைத் துக்கொள்வோம். அவ்விதம் பொருட்குவை பெற்று அகன்றபின் அரசன் தன்னிடம் வந்து அவனைப்போற் குறையிாந்த பல்லாயிரக்கணக்கான வறியருள் ஒருவய்ை எண்ணி அக்கணமே அவனை மறந்து விடுவன். ஆனல் அங்ங்னமின்றி எப்பொழுதும் அரசன்றயவு அவனுக்கிருப்பின் அவன் யாருக்கும் அஞ்சவேண்டியதில்லை. அவனை நாடி வருவோர் அநே கர் இருப்பர். அதனால் அவனுக்கு எப்போதும் மனமகிழ்ச்சி இருந்து வரும்.' -இள.