பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

бil_. குருபாதம் சிறப்புரை மகாமகோபாத்தியாய, முதுபெரும்புலவர் பண்டிதமணி, திரு. மு. கதிரேசச் செட்டியார். அவர்கள். 8–3—43 | குமரகுருபர அடிகள் அருளிச்செய்த நீதிநெறி விளக்கம்' என்னும் அரிய நூல் திருக்குறள் முதலிய பண்டைத் தமிழ் நீதிநூல்களின் சாரமாகத் திகழ்வ தொன்று. சொற் செறிவும் பொருணலமும் வாய்ந்தது. இதற்குப் பல ஆசிரியர்கள் எழுதிய உரைப்பகுதிகளைக் தொகுத்து, ஆங்கில மொழிபெயர்ப்பையும் சேர்த்துக் காழி. சிவ. கண்ணுசாமி பிள்ளை, B. A., அவர்களைக் கொண்டு அழகுற அச்சிட்டுத் தமிழுலகிற்கு உபகரிக்க வர்கள் கற்காலம் தருமபுர ஆதீனத்தில் எழுந்தருளி யிருக்கும் ரீ-ல-புரீ சண்முகதேசிக ஞானசம்பந்த பரமா சாரிய சுவாமிகள் ஆவார். இவர்கள் காலகிலேயறிந்து தமிழ் மொழி, சைவசமய வளர்ச்சி குறித்துச் செய்து வரும் நல்லறங்கள் பலவாகும். தம் ஆதீனத்துப் பெரி யோர்கள் அருளிச் செய்த சைவ சாத்திர நூல்கள் பல வற்றைச் செப்பமுற அச்சிட்டுப் பல அன்பர்களுக்கும் உதவிவருகின்ருர்கள். சைவப் பெருங்கழகம் கூட்டியும், அன்னபிற கழகங்களை ஆதரித்தும் இவர்கள் செய்து வரும் உதவிகள் பல. அம்முறையில் இவ் வெளியீட் டையும் தமிழுலகிற்கு உபகரித்த பெருமை அடிகளுக்கே உரியதாயிற்று. தமிழ்ச் சைவவுலகு இ வ. ர் க ள் புகழ் ஒளியால் விளக்கமுற்றுப் பண்டைப் பெருமையைப் புதுக்கி கலம் பெறுகவென இறைவனே வேண்டுகின்றேன்.