பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விட 'சிவமயம் திருச்சிற்றம்பலம் நீதிநெறி விளக்கம்

===

க. கடவுள் வாழ்த்து நீரிற் குமிழி யிளமை நிறைசெல்வம் நீரிற் சுருட்டு நெடுந்திரைகள்-நீரில் எழுத்தாகும் யாக்கை சமரங்கா ளென்னே வழுத்தாத தெம்பிரான் மன்று. 1. நீரில் - நீரின் கண் (தோன்றியழியும்), குமிழி - கொப்புளம் (போன்று), இளமை - இளமைப்பருவம் (நிலையில்லாது அழிவ தாகும்); நிறைசெல்வம்.(கிரட்டப்படும்) குறைவில்லாத பெருஞ் செல்வம், நீரில் - நீரின்கண், சுருட்டும் - (காற்றிற்ை) சுருட்டப் படும், நெடுந்திரைகள் - நெடிய அலைகள் (போன்று நிலையில் லாது அழிவதாகும்) ; நீரில் - நீரின்மேல், எழுத்தாகும் - (எழுதிய) எழுத்தைப் போன்று (நிலையில்லாது அழியும் இயல்பை யுடையது) ஆகும், யாக்கை - உடல் ; (ஆதலால்) நமரங்காள் - நம்மவர்கள்ே, என்னே - ஏன்ே, வழுத்தாதது - வணங்கிப் போற்ருமல் (காலம் போக்கி) இருப்பது, எம்பிரான்-எம்பெருமா ஞகிய (கூத்தனின்), மன்று - (திருச்) சிற்றம்பலத்தை!