பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/310

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 நீதிநெறிவிளக்கம் அங். கற்பின் மகளிர்-(உ) கற்பின் மகளி னலம்விற் றுணவுகொளும் பொற்ருெடி நல்லார் கனிநல்லர்-மற்றுத்தம் கேள்வற்கு மேதிலர்க்குங் தங்கட்குங் தங்கிளைஞர் யாவர்க்குங் கேடுகு ழார். 1. கற்பில் - கற்பில்லாத, மகளின் - குலமகளைக் காட்டி லும், நலம் - தம்முடைய இன்ப்த்தை, விற்று - (பொருளுக்காக) விலைப்படுத்தி, உண்வு கொளும் வயிறு வளர்க்கும், பொற்ருெடி - பொன்னலாகிய வளையல் (அணிக்க), நல்லார் - பொதுமகளிர், கனி - மிகவும், நல்லர் - சிறந்தவர்களாவர் ; (ஏனெனில்) மற்று தம் - தம்முடைய, கேள்வற்கும் - கணவனுக்கும், எதிலர்க்கும் - (களவில் தம் நலம் துய்க்கும்) பிறருக்கும், தங்கட்கும் - தங் களுக்கும், கம்கிளைஞர் - தம்முடைய சுற்றத்தார், யாவருக்கும் - அனைவ்ருக்கும், கேடு - (எதிர்பாராப்) பழியினே, குழார் - (கற்பில் மகள் எய்துவிப்பதுபோல) எய்துவியாராகலின். 2. நலம் விற்றுணவு கொள்ளும் பொற்ருெடி கல்லார் கற்பின் மகளின் நனிநல்லர், மற்றுத்தம் கேள்வற்கும், ஏதிலர்க்கும், தங்கட்கும் தங்கிளைஞர் யாவர்க்கும் கேடு குழார். 3. கற்பிலாக் குலமகளிர் பொதுமகளிரினுங் கடைய ராவார். 4. புகழ்புரிங் கில்லிலோர்க் கில்லை யிகழ்வார்முன் ஏறுபோற் பீடு நடை. ' -குறள்.

  • பொருவில் கற்பின் வழி இயபுன் மங்கையர் உரிய மூன்று மரபிலுள் ளோரையும் வெருவங் தேங்கி விழுங்கி யுமிழ்கலா வெளியுங் கோ கிற்குடி யேற்றுவார். ” --காசிகாண்டம். 5. இதுமுதல் இாண்டு பாட்டுக்களால் கற்பில்லாத குல மகளிாதி இழிவு கூறப்படும். ” -உ. வே. சா. * பொதுமகளிர் தம் கணவர்கட்கும், பிறர்க்கும், தங்கள் சுற்றத் தாருக்கும் கேடு நினையார் ; ஆதலால் அன்னர் கற்பிலாப் பெண்களினும் மேல் என்றபடியால், கற்பிலாப் பெண்களால் இத்தனைக் கேடுகளும் வரும் என்பது சொல்லாமலே விளங்குமன்ருே ? ' -இள.

கற்பின் மகளின் :

ஒருவனுக்கு மனைவியாய்ப் பாத்தையர் போல கடிக்கும் பெண்ணையே கற்பின்மக ளென்ருர். ' -சி. வை. தா.