பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/334

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308 நீதிநெறிவிளக்கம் டொக்கும் என்பார் நூாக்கிற் பதறிக் குலைகுலைப எனவும், துறந்தோர் செயலைக் கூறுவோர் இவர் செயலுக் கிாங்கினர் ஆதலால், எவ்வாற்ரு னுய்வாரிவர் ' எனவுங் கூறினர். ' -தி. சு. செ. இச் செய்யுள் பொதுப்பட உலக மக்களைக் குறித்ததாகப் பல உரையாசிரியர்களும் உாை யெழுதியுள்ளார்கள். எனினும், மேல் அடுஆம் செய்யுள் விளக்கவுாையிற் கண்டபடி, இந்நூல் இறுதிச் செய்யுட்கள் பதினெட்டும் அறவோரைக் குறித்தனவாதலால் இதுவும் அவாைக் குறித்த தாகக் கொண்டு உரைசெயலே எற்புடைத்தாம். உலக மாயையினின்று விடு பட கினைத்துத் துறவு பூண்டோரிலும் பலர் தொடக்கத்தில் அவாவையும் ஐம்புலப் பற்றுக்களையும் அறவே அறுக்க முடியாமலும், அவற்றில் ஈடுபட்டுழலவும் மனமில்லாமலும் இருதலைக் கொள்ளி எறும்புபோல் திகைத்துத் தம் அறிவிற்கேற்றவாறு தேர்ச்சியின்றிப் பலப்பல வினைகளை இயற்றுவர். அவை கல்லாற்றிற்படாத தீவினைகளே யென்பது ஒரு வாற்ருல் நல்லாற்றினுய்க்கின் என்றதாற் பெறப்படும். மெய்யுணர்ந்த ஆசிரியர் ஒருவரை அடைந்து, அவர் அறிவிக்க அறிந்து, முற்றத்துறந்து, ஐம்புலனடக்கி மெய்யுணரும்வரையில் அவர்கள் ஆற்றும் வினைகள் துற வோர்க்குரிய அறச் செயல்களின்பாற்படாவாம். ஆகவே, அவ்வாறு செய்தாலன்றி இருவினையும் அற்று உண்மைத் துறவிகளாகிப் பிறப்பருர் என்பதே இச்செய்யுளால் குறிக்கப்பட்டதாம். பாபாப்பினுேடே பலபல செய்தாங்கு :

  • பாபாப்பு, குலைகுலைப-இவற்றுள் பின்னைய பிரிந்திசைப்பினும் முன்னைய பிரிந்திசையாமையால் இரட்டைச் சொற்கள். -தி.சு.செ.

† :

பாபாப்பு, குலைகுலைப என்பன இரண்டும் இாட்டைக் கிளவிகள்.

-கோ. இ.

  • பாபாப்பினேடே - சம்பிாமத்தோடே. சம்பிாமம் - செய்ய விரும் பிய காரியத்திலே மனதுக்குத் தோன்றும் விரைவு.' -அ. கு.

இாவு பகல் பாழக் கிறைப்ப :

  • அங்கே பெற்றுக்கொண்ட பொருள்களை ஒரு பிரயோசனமுமில் லாத சிற்றின்ப விஷயங்களிலே அள்ளி வீசுவார்கள்.” அ. கு.

பாழ் - பண்பாகு பெயாாய்க் காரியத்தை உணர்த்திற்று.” -கோ. இ. இறைப்ப - பல்லோர் படர்க்கை எதிர்கால வினைமுற்று. முக்காலத் கிலும் ஒத்து நடக்கும் பொருளை எதிர்காலத்தால் கூறுதல் தமிழர் மதம் ; அஃறிணைக்கண் வருவதானல் அன் சாரியை பெற்று இறைப்பன எனவும் வரும். ' -கோ. இ.