பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/343

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூக. துறவு-உள் ளத் துறவு நெஞ்சு புறம்பாத் துறந்தார் தவப்போர்வை கஞ்சுக மன்று பிறிதொன்றே-கஞ்சுகம் எப்புலமுங் காவாமே மெய்ப்புலங் காக்குமற் றிப்புலமுங் காவா திது. 1. நெஞ்சு - உள்ளம், புறம்பா - (பற்று நீங்காமலும், கட்டுப்படாமலும்) அயலகாகச் செல்ல, துறந்தார் - (சொற் செயல்களாலே) துறந்தவர்போலக் காணப்படுபவருடைய, தவப் போர்வை - தவவேடமாகிய போர்வை, கஞ்சுகம் - சட்டை போன்றதுமாகாது ; பிறிது - வேறு, ஒன்று - ஒன்றே (அவ வேடமே) யாம் ; (என்னை 2) கஞ்சுகம் - சட்டையானது, எபபுலமும - ஐம்புலன்களில் யாதொன்றையும், காவாமே - காவாவிடினும், மெய்ப்புலம் - (தன்னுளடங்கிய) உடலாகிய இடத்தை மட்டுமேனும், காக்கும் - (குளிர், பனி முதலிய வற்றினின்று) பாதுகாக்கும் ; மற்று இப்புலமும் - இந்த மெய்ப் புலனையும், காவாது - பாதுகாத்தல் செய்யாது, இது - இப் (பொய்த்) தவப்போர்வை. 2. கஞ்சுகம் எப்புலமுங் காவாமே மெய்ப்புலங் காக்கும் ; மற்று நெஞ்சு புறம்பாத் துறந்தார் தவப்போர்வை இப்புலமுங் காவாது ; இது கஞ்சுகமன்று பிறிதொன்றே. 3. புறத்துறவினும் அகத்துறவே மாண்புடைத்து. 4. நெஞ்சிற் றுறவார் துறந்தார்போல் வஞ்சித்து வாழ்வாரின் வன்கன ரில்.” -குறள். வலியி னிலைமையான் வல்லுருவம் பெற்றம் புவியின்ருேல் போர்த்துமேய்ந் தற் று.” -குறள். அந்தக் காண மடங்கத் துறப்பதுவே யெந்தத் துறவினுகன் றெந்தாய் பாாபாமே." -தாயுமானுர். 5. முயற்சியுடையோன் அதற்குத் தகுதியாகக் கஞ்சுகம் பூண்டு செல்லல்போல், இவருடைய தவவேடமும் பிறருடைய மாதரை விரும்பி யடைதற்குரியதாதலின் அதனைப் போர்வை என்றும், கஞ்சுகம்போல உடலைக் குளிர் முதலியவற்ருல் வருத்தாமல் காக்கமாட்டாமையால் பிறிதொன்று என்றுங் கூறினர்.” -கோ. இ.

மனத்தை நிறுத்தாது விடயத்திற் செல்ல விடுவோர் என்பார் நெஞ்சு புறம்பாத் துறந்தோர் எனவும், மெய் வாய் கண் மூக்குச் செவி