பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/346

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32O நீதிநெறிவிளக்கம் கச. துறவு-படி றி ன் மை வஞ்சித் தொழுகு மதியிலிகாள் யாவரையும் வஞ்சித்தே மென்று மகிழன்மின்-வஞ்சிக்க எங்கு முள ைெருவன் காணுங்கொ லென்றஞ்சி அங்கங் குலைவ தறிவு. 1. வஞ்சித்து - (தவவேடத்தால் உலகத்தோரை) ஏமாற்றி, ஒழுகும் - (அவ்வேடத்தால் தமது தீயொழுக்கத்தை மறைத்து) நடக்கும், மதியிலிகாள் - அறிவிலிகளே ! யாவரையும் - எல்லோரையும், வஞ்சித்தேம் = ஏய்த்து விட்டோம், என் அறு - எனக் கருதி, மகிழன்மின் - மகிழ்ந்துவிடாதீர்கள் வஞ்சித்த - (பிறரறியாதபடி விேர் செய்த) வஞ்சகச் செயல்களை, எங்கும் - எவ்விடத்திலும், உளன் - கிறைந்து நிற்பவகிைய, ஒருவன் - ஒப்புயர்வில்லாத இறைவன், காணுங்கொல் - காண்டான், என்று - என உணர்ந்து, அஞ்சி - அவனுக்குப் பயந்து, அங்கம்உடல், குலைவது - பதறவதே, அறிவு - அறிவுடைமையாகும். 2. வஞ்சித் தொழுகும் மதியிலிகாள். எங்கும் ஒருவன் உளன் ; (அவன்) வஞ்சித்த கானுங்கொல் என்று அஞ்சி அங்கங் குலேவதே அறிவு யாவரையும் வஞ்சித்தே மென்று மகிழன் மின் ! 3. இறைவனை யொளித்தோரு வஞ்சகமில்லை ; ஆதலால் வஞ்சனை யகற்றுமின் ! 4. நெஞ்சிற் றுறவார் துறந்தார்போல் வஞ்சித்து வாழ்வாரின் வன்கன ரில்.’ -குறள். ' பற்றற்றே மென்பார் படிற்ருெழுக்கம் எற்றெற்றென் றேதம் பலவும் தரும்.” -குறள். ' எனக்குத் தகவன் ருல் என்பதே நோக்கிக் தனக்குக் கரியாவான் தாய்ைத் தவற்றை நினைத்துத்தன் கைகுறைத்தான் தென்னவனும் கானர் எனச்செய்யார் மான வினை.” -பழமொழி. 5. ' அணுவுக் கணுவாய் மகத்துக்கு மகத்தாய் ஒருவனுள்ளான் என்பார் எங்கு முளைெருவன் எனவும், அவன் மறைங்கொழுகுந் தியொழுக்கங்க ளெல்லாம், அறியவல்லான் என்பார் யாவரையும் வஞ்சித்தோ மென்று மகிழன்மின் எனவும், உலகினாறிந்து தண்டித் தலினும் அவன் தண்டித்தல் பெரிதென்பார் அஞ்சி யங்கங் குலைவ தறிவு ’ எனவுங் கூறினர்.” -தி. சு. செ.