பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/349

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூடு. துறவு-பழியச்சம் 323 கூடு. துறவு-பழியச்சம் - மறைவழிப் பட்ட பழிமொழி தெய்வம் பறையறைந்தாங் கோடிப் பரக்குங் கழிமுடைப் புன்புலா னற்றம் புறம்பொதிந்து மூடினும் சென்றுதைக்குஞ் சேயார் முகத்து. 1. மறைவழி - பிறரறியாத வகையில் (இரகசியத்தில்), பட்ட செய்த, பழிமொழி - இழிசெயலால் வந்த பழிச்சொற் கள், தெய்வம்'- இறைவனே, பறையறைந்தாங்கு - (எங்குமே) பறையடித்துத் தெரிவித்ததுபோல், ஒடி - (விரைந்து) சென்று, பரக்கும் - பரவும் ; கழி - மிகுந்த, முடை - மு-ைகாற்ற முட்ைய, புன்புலால் - இழிவான இறைச்சியின், நாற்றம் கெட்ாேற்றம், புறம் - மேலே, பொதிந்து - ஒன்றைப் போட்டு மறைத்து, மூடினும் - மூடிஅைம், சென்று - வெளிப்பட்டு, தைக் கும் - பாய்ந்து நாறும், சேயார் - தொலைவிலுள்ளவர்கள், முகத்து - முகத்திலும். 2. புறம் பொதிந்து மூடினும் கழிமுடைப் புன்புலால் கற்றம் சேயார் முகத்துச் சென்று தைக்கும்; மன்றவழிப்பட்ட பழிமொழி தெய் வம் பறையறைந்தாங்கு ஒடிப்பரக்கும். 3. இழிசெயலால் என்றென்றும் எய்தும் பழி. 4. தார்த்த மங்கையர் சோர்வினிற் செய்பழி வார்த்தை யெங்கனும் வல்லையிற் செல்லல்போல் ' - கந்தபுராணம்.

  • பாவமும் ஏனைப் பழியும் படவருவ

சாயினும் சான்றவர் செய்கலார்.” --நாலடியார்.

பதிப்பட்டு வாழ்வார் பழியாய செய்தல்

மதிப்புறத்திற் பட்ட மறு ” -அறநெறிச்சாரம். ' இம்மைத் தவமும் அறமும் என விாண்டும் தம்மை யுடையார் அவற்றைச் சலமொழுகல் இம்மைப் பழியேயு மன்றி மறுமையும் தம்மைத்தா மார்க்குங் கயிறு.” --பழமொழி. 5. உபவாசி யென்பான் தேககனத்தால் ஒளித்துண்டலறிதல் போலத் தவவேடத்தால் மறைந்து தீமை செய்வோன் முக முதலிய குறிகளால் அவன் சீமை வெளிப்படு மென்பார் தெய்வம் பறையறைக் காங்கோடிப் பாக்கும் என்ருர்.” --தி. சு. செ.