பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12 நீதிநெறிவிளக்கம்

அணிநலன் நோக்கிப் பின்னிரண்டடிகட்கும், மிக்க காமம், தொடக்கத்தில் கொடுக்கின்ற சிறிது பொழுதே இருக்குந் தன்மையையுடைய இன்பத்தினும், பின்னர் துன்பத்தைப் பெரிதும் விளைக்கும் எனப்பொருள் கொள்ளலுமாம். தொடங்குங்கால் துன்பமாய் இன்பம் பயக்கும் : தொடங்குங்கால்- 'காலத்தில்' என்பது கால் எனத்தொகுத்து நின்றது; காலம் என்னும் பெயர் கால் என அம் கடைக்குறையாய் வந்தது எனலுமாம். துன்பமாய்- 'துன்பங் தரும் பொருளைத் துன்பமாய் என்றது உபசார வழக்கு.” -ஏ. எஸ். ஜெ. மடங்கொன்று அறிவகற்றும் கல்வி : கொன்று-என்பது இலக்கணை

'கற்கப் புகும்போது நீங்காத்திருந்த அறிவின்மையே துன்பம் பயத்தற்கும், கற்றுணரவுணரத் தோன்றும் அறிவுண்மையே இன்பம் பயத்தற்குங் காரணமாதலைப் புலப்படுத்தற்கே 'மடங்கொன் றறிவகற்றுங் கல்வி' என்றார். -அ. கு.

'அறியாமை மீண்டும் உண்டாகாதவாறு கல்வி கெடுத்துவிடும் என்பார் 'கொன்று' என்றார். 'கற்பக் கழிமடமஃகும் ’’ என்ற நான்மணிக் கடிகைச் செய்யுளும் இக்கருத்தது.” | -இள.

நெடுங்காமம் முற்பயக்கும் சின்னீர இன்பத்தின் :

'நெடுங்காமம்- "எல்லாப் போகங்களினும் தான் மிக்க விருப்பங்கொடுத்தல்பற்றி மகளிர்போகம் நெடுங்காமமெனப்பட்டது" . -அ. கு.

"காமத்துக்குச் சிறுமை அடை கொடாது நெடுமை அடைகொடுத்தது அறிவிலான் அதனைப் பெருமையாகக் கொள்ளுதல்பற்றி என்க.” -கோ. இ. இஃது உட்பகை ஆறனுள் முதலில்வைத் தெண்ணப்படுவதாகும். சின்னீர -சின்மையாகிய நீர் என விரியும். "சிறுமையைச் சின்மை என்பது வழக்கெனவும், மரபு வழுவமைதி எனவுங் கூறுவர் சேனாவரையர் முதலியோர்.” -கோ. இ.

முற்றிழாய் : "முற்றிழை யென்பது அன்மொழித் தொகைக்காாணப்பெயர் விளி. இனி, உறுப்பனைத்தினும் ஆபரணங்களை யுடையாளே எனப் பொருள் கூறுதலுமியலும்.” -வி. கோ. சூ. இது "மகடூஉ முன்னிலை” எனப்படும்..