பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 நீதிநெறிவிளக்கம் டு. உய்த்துணர்வும் சொல்வன்மையும் எத்துணேய வாயினுங் கல்வி யிடமறிக் துய்த் துணர் வில்லெனி னில்லாகும்-உய்த்துணர்ந்தும் சொல்வன்மை யின்றெனி னென்ன மஃதுண்டேற் பொன்மலர் நாற்ற முடைத்து. 1. எத்துணைய ஆயினும் - எவ்வளவு மிகுதியாயிருப்பினும், கல்வி - (ஒருவர் கற்ற) கல்வி, இடமறிந்து (கற்ற நாற்களில் ஆழ்ந்தகன்ற நுண்கருத்துக்கள் பொதிந்து கிடக்கும்) இடங் களைத் தெரிந்து, உய்த்துணர்வு - நுனித்துப் பொருள்கொள்ளும் ஆராய்ச்சி யுணர்வு, இல்லெனின் - இல்லையாயின், இல்லாகும் - (கல்வியறிவு) இல்லையாகும் ; உய்த்துணர்ந்தும் - அவ்வாறு நுனித்து ஆராய்ந்து பொருள் தெளிந்தும், சொல்வன்மை - (தான் அறிந்து தெளிந்த ஒன்றைப் பிறருணர எடுத்து விளக்குஞ்) சொல்லாற்றல், இன்று எனின் - இல்லையாயின், என்னும்-(பயன்) யாதாகும் அஃதுண்டேல் - அவ்வாற்றலு முளதாயின், பொன்மலர் - பொன்னிற்ை செய்யப்பட்ட மலர், நாற்றம் - நன்மணத்தையும், உடைத்து - உடைத்தாவது (போலாம்). 2. கல்வி எத்துனேயவாயினும் இடமறிந்து உய்த்துணர்வில் லெனின் இல்லாகும்; உய்த்துணர்ந்தும் சொல்வன்மை இன்றெனின் என்னும் ! அஃதுண்டேல் பொன்மலர் நாற்றம் உடைத்து. 3. கல்வியாகிய செயற்கையறிவு பயன்படுவது இயற்கை யுணர்வாகிய ஆராய்ச்சி யறிவினுலும், சிறப்படைவது சொல் வன்மையிலுைமேயாம். 4. இணரூழ்த்து காரு மலானையர் கற்ற துனா விரித்துாையா தார். -குறள. நுண்மொழி நோக்கிப் பொருள்கொளலு நூற்கேலா வெண்மொழி வேண்டினுஞ் சொல்லாமை-நன்மொழியைச் சிற்றின மல்லார்கட் சொல்லலு மிம்மூன்றுங் கற்றறிந்தார் பூண்ட கடன் ” -திரிகடுகம். செழும்பெரும் பொய்கையுள் வாழினு மென்றும் வழும்பறுக்க கில்லாவாங் தோை-வழும்பில்சீர் நூல்கற்றக் கண்ணு நுணுக்கமொன் மில்லாதார் தேர்கிற்கும் பெற்றி யரிது. -நாலடிபார். தான் தேருன் பிறனையெப்படித் தேற்றுவான் ? -முதுமொழி. 5. கல்வி - (ஒருவன் கான் தனியே நூல்களைப் படித்தறிந்து கொண்ட) கல்விகள், எத்துணைய ஆயினும் - எவ்வளவினவாயினும்,