பக்கம்:நீதி கேட்டு நெடிய பயணம்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

119 கள் விளைவிக்கப்பட்டன. அதன் விளைவாக அவர் உணர் விழந்தார். அவரது குரல் வளையை நெறிப்பதற்கான ஒரு முயற்சி கூட செய்யப்பட்டிருக்கலாம். அவர், தற்கொலை செய்து கொண்டார் என்று தோன்றுமாறு செய்ய அவர் துவலைக் குழாயில் தொங்கவிடப்பட்டார் என்று சந்தே கிக்க ஆதாரங்கள் உள்ளன. சுருங்கச் சொன்னால் மரணம் விளைவிக்கக் கூடிய வன்முறையின் காரணமாக அவர் தனது மரணத்தைச் சந்தித்தார் என்று நம்புவதற்குப் போதுமான ஆதாரங்கள் உள்ளன." நீதிபதியின் இந்த அறிக்கையைத்தான் "விசாரணை வரம்பை மீறியது" என்று அரசு ஆணை குறிப்பிடுகிறது. மரணம் அடைந்ததற்குக் காரணமான - சூழ் நிலை குறித்து விசாரணை நடத்தச் சொன்னீர்கள். நடத்தி அந்த நீதிபதி காரணத்தை அறிவித்திருக்கிறார். இத்தகைய நிகழ்ச்சி மீண்டும் நடக்காமல் இருப்ப தற்குரிய நடவடிக்கைகளைப் பரிந்துரைக்கச் சொல்லியி ருக்கிறீர்கள். அதைத்தான் அவர் பரிந்துரைத்துள்ளார். நடந்த நிகழ்ச்சிக்கு எடுக்கும் நடவடிக்கைதான் இதைப்போன்ற நிகழ்ச்சிகள் மீண்டும் நடக்காமல் தடுப் பதற்கு ஏற்ற பரிந்துரை அல்லவா? அதை எப்படித் தவறு என்கிறீர்கள்?" இவ்வாறு சட்டப் பேரவையில் கேள்வி எழுப்பிய நான் ; தொடர்ந்து பேசியபோது கூறியதாவது:- பிட்டுச் சொல்லவில்லையே "பால் கமிஷன் குற்றவாளிகளை யார் என்று குறிப் என்று கேட்கிறார்கள். அதற்கிடையே குற்றவாளிகளைக் கைது செய்வது எப்படி என்று எல்லா எதிர்க் கட்சிகளையும் சேர்த்துத்தான் அந்தக் கேள்வியைச் கேட்டிருக்கிறார்கள். பால்கமிஷன் அறிக்கையின் 44, 45-வது பக்கங்களில் குற்றவாளிகள் யார் என்பதைக் குறிப்பிட்டுக்காட்டி யிருக்கிறார்கள். நான் சுருக்கமாகப் படிக்கிறேன்.