பக்கம்:நீதி கேட்டு நெடிய பயணம்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 - சாட்டப்பட்டபோது அதற்கு சி. பி. ஐ. விசாரணை வேண்டு மென்றுஹண்டே அவர்கள் இங்கே எழுந்து நின்று அப் போது கேட்டபோது- அன்பிற்குரிய கே. டி. கே. தங்கமணி விவாதித்த அவர்கள் நேரத்தில் சட்டசபையிலே அன்றைக்கு எழுந்து நின்று சென்னை மாநகராட்சியில் தவறு நடந்ததாக சட்டசபையில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் சொல்வதால் இங்கேயே இப்போதே அறிவிக்கிறேன்: மாநகராட்சி மன்றம் கலைக்கப்படும் என்று சட்டசபையில் அறிவித்து, மேயர், முன்னாள் மேயர், துணை மேயர் போன்ற என்னுடைய பழம்பெரும் நண்பர்கள் உட்பட அனைவரையும் கைது செய்து நடவடிக்கை எடுத்த கருணாநிதிதான், இன்றைக்கு மாண்புமிகு மாண்புமிகு முதலமைச்சரை வழியைப் பின்பற்றக்கூடாதா என்று கேட்கிறேனே அல்லாமல் வேறில்லை. நீங்கள் அந்த ஒரு தவறு தஞ்சையில் மத்திய கூட்டுறவு வங்கியில் நடந்ததைச் சுட்டிக்காட்டி. தஞ்சை நகரத்தில் உள்ள அனைத்துக் கட்சித் தோழர்களும் ஒரு ஊர்வலம் நடத்த - மாணிக்கவாசகம் என்ற ற என் னு டைய ஆருயிர் நண்பர்- வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கூறி, மறுநாளே நடவடிக்கை எடுத்து கைது செய்து இரண்டு ஆண்டுக்காலம் சிறை தண்டனை பெற்று, அது மாத்திரமல்ல; வக்கீல் தொழிலே இன்று நடத்த முடியாத அளவிற்கு அன் றைக்கு நடவடிக்கை எடுத்த கருணாநிதிதான் இன்றைக்கு மாண்புமிகு முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களைப் பார்த்து, இந்தக் கோரிக்கை வைக்கிறேனே வேறல்ல. அல்லாமல் திருத்தணியில் திருவேங்கடம் என்ற அறங்காவலர் குழு உறுப்பினர் ஒரு பெண்ணிடம் தவறாக நடந்தார் என்ற செய்தி கேள்விப்பட்டவுடன் அவரை அந்தக் குழுவிலிருந்து நீக்குவதற்கு ஆணை பிறப்பித்த கருணாநிதிதான் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களைப் பார்த்து இந்தக் கோரிக்கை வைக்கிறேனே அல்லாமல் வேறல்ல. குடந்தையில் ஒரு அறங்காவலர் குழு உறுப்பினர்- நம்முடைய நாவலருக்கு நன்றாக தெரியும்- கழகச் செயலா ளருடைய சகோதரர், அங்கேயுள்ள கோவில் பிரகாரத்தில் கடைகள் கட்ட பிரகாரத்தை உடைத்தார் என்ற செய்தி கேள்விப்பட்டவுடன், அவரை விலக்கி வைத்து நடவடிக்கை எடுத்த கருணாநிதி தான் இன்றைக்கு முதலமைச்சரிடமும் அதே நியாயத்தை எதிர்பார்த்து கிடைக்கும் என்ற நம்பிக் கையோடு கோரிக்கை வைக்கிறேனே அல்லாமல் வேறல்ல