பக்கம்:நீதி கேட்டு நெடிய பயணம்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59 க இரண்டு மட்டும்தான், இந்திக்கு வேலை கிடையாது என்று தமிழ்நாட்டிலே இருப்பதைப்போல் மேற்கு வங்கத்திலே வங்கமொழி, ஆங்கிலம், இந்திக்கு வேலைகிடையாது என்று உங்களால் உத்தரவிட முடிந்ததா? கேரளத்திலே நீங்கள் ஆட்சி நடத்தியபோது இங்கே மலையாளம், ஆங்கிலம், இந்திக்கு இடம் கிடையாது பள்ளிக்கூடங்களில் என்று ஆணையிட முடிந்ததா? திரிபுராவிலே நீங்கள் தானே ஆளுகிறீர்கள். அங்கே இருமொழி கொள்கைக்கு இடம் உண்டா? ஆனால் தமிழ்நாட்டிலே இந்தித்திணிப்பு வந்து விடும் அதை தி. மு. க. வரவேற்றுவிடும் என்று மார்க் சிஸ்டுகள் பேசினார்கள். மேற்கு வங்கத்தை, திரிபுராவை, கேரளாவைச் சுட்டிக்காட்டியபோது பதில் சொல்லாத வர்கள் இன்றைக்கு நம்மை அரசியலிலே மாணவர்களாக நடத்துகின்ற அந்த வேடிக்கையைப் பார்த்து நான் உள்ள படியே வியப்படைகிறேன். பயன் நான் இந்தப் போராட்டத்தை நடத்துகின்ற காரணத் தால் விலைவாசி உயர்ந்து கொண்டே போவதை மறந்து விடவில்லை. நான் இந்தப் போராட்டத்தை நடத்துகின்ற காரணத்தால் தொழிலாளர்களுடைய உரிமைகளை வேண்டுமானாலும் கழுத்தை நெறித்துக் கொன்று விடலாம் என்று எண்ணுவார்களேயானால் அதைத் தடுத்து நிறுத்தத் தயங்கப் போவதில்லை. நான் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவிட்ட காரணத்தால் மக்களுடைய அன்றாடப் பிரச்சினைகளைப் பற்றிக்கவலைப்படாமல் இருந்துவிடப் போவதில்லை. அவசரமாக இருந்தால் மார்க்சிஸ்டு கம்யூனிஸ் டுகளைக் கேட்டுக்கொள்வேன் நீங்கள் ஒரு நடைப்பயணத்தை யோசனையை ஆரம்பியுங்கள். எங்களுக்குச் சொல்லுகிற ஏன் நீங்கள் செய்துகாட்டக் கூடாதா? உங்களால் செய்ய அதையும் நாங்கள் தான் வேண்டு மென்றால் என்ன அர்த்தம்? அதை ஏன் நீங்கள் செய்யக் கூடாது? இதைத்தான் மார்க்சிஸ்டுகளைப் பார்த்து முடியாதா? கேட்க விரும்புகின்றேன். கோவில் பட்டியில் கலைஞர் உரை 18-2-82 நான்