பக்கம்:நீதி கேட்டு நெடிய பயணம்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 ஆனால் நம்முடைய தமிழகத்தைப் பொறுத்த வரையில் அப்படிப்பட்ட உணர்வுகளைத் தூண்டி விடுகின்ற நிகழ்ச்சி கள் அல்லது செய்திகள் நாள்தோறும் பத்திரிகைகளிலே வெளிவந்து மக்களும் அதைப் படித்துப் பார்த்து பரபரப்பு அடைகின்ற நிலைமை இருந்து வருகின்றது. வன் முறைச் செயலைக் கண்டிக்கிறேம்! இந்தச் சுற்றுப்பயணத்திலே ஈடுபட்டிருக்கின்ற என்னைக் கூட கொல்வதற்காக ஒருவர் கத்தியோடு பாய்ந்தார் என்ற செய்தியும் நான் தங்கி இருந்த ஓட்டல் ஒன்றில் இரும்புத் தடியோடு ஒருவர் அலைந்து கொண்டிருந்தார் அல்லது ஒளிந்து கொண்டிருந்தார்; அவர் கைது செய்யப்பட்டிருக் கிறார் என்ற செய்தியும் நம்முடைய நெடிய பயணத்திலே ஈடுபட்டுள்ள கழகச் செயல் வீரர்களும், வீராங்கனைகளும், மாணவர்களும், இளைஞர்களும், பாட்டாளிகளும் நடந்து வருகிற பாதையிலே துலுக்கப்பட்டிக்கு அருகாமை யில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்தன. அவைகள் நெடிய பயணத்திலே ஈடுபட்டிருந்த நாங்கள் அங்கே வந்து சேர்வதற்கு முன்பே வெடித்து, அப்படி வெடித்த காரணத் தால் ஒரு பெண்மணி காயமுற்றார் என்ற செய்தியும் பத்திரிகைகளிலே வெளிவந்திருக்கிறதே தவிர, அது குறித்து இதுவரையில் நான் எந்த அறிக்கையும் வெளியிட வில்லை. ஏனென்றால் எதற்காக அந்த காரியங்கள் நடை பெற்றன; உள்ளபடியே என்னைத் தாக்குவவதற்கு அல்லது என்னைச் சார்ந்தவர்களை - தி. மு.க. தொணடர்களைத் தாக்குவதற்கு இந்தக் காரியங்கள் நடை பெற்றதா என்பதைப் போலீசார் ஆராய்ந்து அறிவிக்கும் வரையிலே பொறுத்திருக்கலாம் என்பதற்காகத்தான் கடந்த இரண்டு மூன்று நாட்களாக இந்தச் செய்திகள் ஏடுகளிலே வந்த போதும்கூட - நம்முடைய சட்டமன்றத்திலே கூட கழகச் சார்பிலே அது குறித்து கேட்கப்பட்டு அவை முன்னவர் நாவலர் அவர்களும், மற்றவர்களும் அது குறித்து நாங்கள் இன்னும் விசாரித்துக் கொண்டிருக்கிறோம் என்று தெரிவித் ததாக செய்திகள் வெளிவந்தாலும் இந்த ஏழு நாட்களாக நான் பேசுகின்ற எந்தப் பொதுக்கூட்டத்திலும் அதைப்பற்றி குறிப்பிடவும் இல்லை. நம்முடைய நண்பர்கள் பல பேர் பேசிய நேரத்திலும், இந்தச் செய்திகளைப் பற்றிக் குறிப்பிடவேயில்லை.