பக்கம்:நீதி போதனைப் பாட புத்தகம்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தற்காகவே யான் மூர்ச்சை அடைந்தேன். என்று கூறினாாம். இதனுல் சிவகாருண்ய உணர்ச்சி உயிர் அற்ற சடப் பொருளிட் த்திலும் காட்டவேண்டும் என்பது புலனுகிறதல்லவா?' என்று கூறியருளினர். இவ்வாறு சீவகாருண்யமே தம் குறிக்கோளாக வாழ்ந்த பெரியiார். தமது தருமசாலேயில் ஒய்ந்த கேசங் களில் எல்லாம் சீவகாருண்யத்தைப்பற்றியும் சமரச சன்மார்க்கத்தைப் பற்றியும் உபதேசம் செய்து வட லுரருக்கு மிக அண்மையதான மேட்டுக்குப்பத்தில் உள்ள சித்திவளாகம் என்னும் திருமாளிகையில் நுழைந்து திருக்காப்பிட்டுக்கொண்டனர். இத்தகைய பெரியார்களுடைய வாழ்க்கை வர லாறுகளைப் படிக்கும் நாம், அப் பெரியார் மேற் கொண்ட பண்புகளைப் பெற்று விளங்க முயலுதல் வேண்டும். ப யி ற் சி வி ளு க் க ள் 1. சீவகாருண்யம் இன்னது என்பதை விளக்கி ஒரு கட்டுரை வரைக. 2. இராமலிங்க வள்ளலார் குடும்பத்தைப் பற்றி எழுதி .ே சீவகாருண்யமே வள்ளலார் குறிக்கோள் என் பதை எப்படி அறியலாம் ? 4. வள்ளலார் பலருக்கும் உதவி செய்யும் பண். பினர் என்பது எப் படி க் தெரிகிறது?