பக்கம்:நீதி போதனைப் பாட புத்தகம்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

–50– களை ஏன் சீரியர் என்றும், செம்மையர் என்றும் செப் புதல் கூடாது? இத்தகைய தன்னலம் அற்ற தகைமை எல்லோ நக்கும் அமையும் பண்புகளில் ஒன்றன்று. இதனே உலகில் ஒரு சிலரே பெற்றுப் பெருமை யுறுபவர் ஆவர். எக்காலத்தும் தன்னலக்கொள்கையே இத் தரணியில் தழைத்து ஓங்கி சிற்கும் கிலேயில், இடை யில் தன்னலமற்ற பண்பும் பெற்று விளங்குதல் என் முல், அதனே அரியதினும் அரியது. என்று அறையவும் வேண்டுமோ ? இத்தகைய தன்னலத் தன்மை மிக்க காட்டிடையே தன்னலம் அற்ற குணம் அமையப்பெறு வது முட்களுக்கிடையே ரோசாமல்ர் மலர்ந்திருப்பது போன்றதுதான். ரோசாமலர் இளைஞர்முதல் முதியர் வரை விரும்பப்படுவதுபோல், தன்னல மற்றவரையும் மன்பதை யுலகில் எவரும் விரும்புவர். இத்ததைய தன்னலம் அற்ற தகைமையாளர் சமூகத்திற்கும் சமுதாயத்திற்கும் பெருந்தொண்டு செய்வர் என்ப தைப் பேசவும் வேண்டுமா ? இவர்களால் காட்டிற்கே நன்மை உண்டு என்பதை விலவும் வேண்டுமோ? இவர்கள் இம் மண்ணிடையே மாண்பு பெற்றுப் பின்னர் விண்ணிடையே, வலவனும் எவா லான ஊர்தி யில் இக்கர்த்து புண்ணியப் பேற்றைப் பொலிவுடன் பெற்றுத் திகழ்வர் என்பது மேய்யுரையே அன்றிப் பொய்யுரையாகாது.