பக்கம்:நீத்தார் வழிபாடு (ஆங்கில மொழிபெயர்ப்புடன்).pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9.5 நீத்தார் வழிபாடு

விண்ணிலவு மதியமுதம் ஒழியாது பொழியவே Vinnnnilavu mathiyamudham ozhiyaadhu pozhiyavē

வேண்டுவேன் உமதடிமை நான் vēnnduvēn umadha dimai naan வேதாந்த சித்தாந்த சமரச நன்னிகலபெற்ற Vedhaantha siddhaantha samarasa nannilai petrra வித்தகச் சித்தர் கனமே! viththagach chiththar gannamë

கணக்கு இல்லாத பிறவிகளில் மனிதப் பிறவி தான் எல்லா வற்றினும் கிடைப்பதற்கு அரிது ஆகும். இந்தப் பிறவி நீங்கிகுல் எந்தப் பிறவி வந்து சேருமோ? ஏது வருமோ நான் அறிய முடியாது.

இடம் அகன்ற இத்த உலகத்தில் நான் உயிரோடு இருக்கும் பொழுதே, அருள் பொருந்திய ஆகாயத்தில் காலை ஊன்றி நின்று ஆனந்தம் என்னும் மழை பொழியும்படியான மேகத்தோடு கலந்து என் அறிவு அலையாமல் இருக்குமாறு செய்வது நல்லது.

இத்தகைய நிலே பொருந்துகிறவரையில், தலைமை பொருந்தி யிருந்த இந்த உடலின்மேல் இருக்கின்ற ஆசை நீங்காமல், கெளரி. குண்டலி - ஆயி - பண்ணவி - ஆகிய இறைவியின் அருளில்ை, ஆகாயத்தில் பொருந்தியுள்ள சந்திரன் அமுதம் இடைவிடாது பொழியவேண்டும் என்று வேண்டுவேன்.

நான் உம்முடைய அடிமை.

வேதாந்தமும் சித்தாந்தமும் சமரசப்படுத்தி நன்னிலை அடந்ைதிருக்கிற அளவு பொருந்திய சித்தர்கணமே.

We have taken births countless and human birth is rare and rare indeed. If this birth should slip or fail, what kind of births may occur or what will come - I cannot perceive. While I am in this broad world, I should set my foot in the sky of Grace, mingle with clouds that shower Bliss of eternal joy, and possess unshaken wisdom—this is good indeed.

Till this state is impressed or attained, the body was the master. The Love for the body not decreasing, by the grace goddess Gawri-Kundali - Aayi - Pannavi-the Moon unceasingly should stream ambrosia—This 1 request.