பக்கம்:நீத்தார் வழிபாடு (ஆங்கில மொழிபெயர்ப்புடன்).pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 நீத்தார் பெருமை

'சிரார் நாவலர் கோன் ஆரூரன் உரைத் த தமிழ்

Seeraar naavalarkön Aaru ran uraiththa thamizh பாரோர் ஏத்தவல்லார் பரலோகத்(து) இருப்பாரே. Paarū r. ēththavallaar para1dgaththu iruppaarё

அழகு பொருந்திய மூன்று கோட்டைகளும் எரிந்து போகு மாறு வில் வளைத்தவன்; கச்சு அணிந்த மார்பின உடைய உமையோடு மழபாடியுள் இருப்பவன்; (அச்சிவபெருமானப்) புகழ் பொருந்திய திருநாவலூரில் வாழ்பவன் ஆகிய ஆரூரன் தமிழ்ப் பாடல்களால் பாடின்ை. அப்பாடல்களை உலகத்தவர் பாடவல்ல வர் ஆல்ை சிவலோகத்தில் இருப்பார்கள்.

He bent the bow to burn the three beautiful fortresses. He resides at Mazhapaadi with Uma wearing bodice on the breast. Him sang in Tamil, the famous ehief of Navalur, Aruran. Those well-versed in them will dwell In Sivaloka.

(24)

மக்கள் வேறு; மாக்கள் வேறு; மாக்கள் ஐந்து அறிவே படைத்தவை. ஆல்ை மக்களோ ஐந்து அறிவோடு இது நல்லது, இது தீயது, இது செய்யத்தக்கது, இது செய்யத்தகாதது எனப் பிரித்து அறியக் கூடிய பகுத்தறிவு படைத்தவர்கள். இத்தகைய அறிவு கல்வியால் தான் வரும். கல்வி தானும் இருவகைப்படும். ஒன்று உலகியல் கல்வி, மற்றென்று தெய்வ க் கல்வி. உலகியல் கல்வி, பொருள்ஈட்டுதலும், ஈட்டிய பொருளைக்காத்தலும், அதனல் இன்பம் நுகர்தலும் அறிவிக்கும். தெய்வக் கல்வி அற நெறியைப் புகட்டும்; தெய்வ அறிவை உண்டாக்கும்; முத்திநெறி அறிவிக்கும்; பிறவிப் பிணியைப் போக்கும். ஆகவே கற்றவர் என்னப்படுபவர், இவ்விருவகைக் கல்வியும் கற்றவராவார். கற்பதலைாகிய பயன் இறைவனது நற்ருள் தொழுதல் ஆகும்.

திருச்சிற்றம்பலம் மற்றுப் பற்று எனக்கு இன்றி நின்திருப் Matrrup patrru enakku intrri ninthirup

பாதமே மனம் பாவித்தேன்

paadhamē manam paaviththēn