பக்கம்:நீலா மாலா.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

119

119 வேண்டியவர். அவருடைய அம்மாவுக்கு நரம்பு வியாதி. அதைக் குணப்படுத்த இவர் அடிக்கடி அவர்கள் வீட்டுக்குப் போய் வருவாா. அவர்தான் தகவல் கொடுத்திருப்பார்’ என்ருள் நளினி. 'ஏனம்மா, மூளை வியாதி, நரம்பு வியாதி கிபுணரான டாக்டர் சூரியசேகர்தான் உங்களுடைய கணவரா? கீழ்த் திசை நாடுகளிலே அவர் மிகப் பிரபலமானவர் அல்லவா ? அவர் பெண்தான் மாலா என்பதைக் கேட்க எனக்கு இரட்டிப்புச் சந்தோஷம். ஆமாம், சென்னையில் அவரது விலாசம் என்ன?’ என்று கேட்டார் டி. எஸ். பி பரமசிவம் பிள்ளை ஒரு காகிதத்தில் விலா சத்தை எழுதிக் கொடுத்தார். சென்னையில் உள்ள மேல் அதிகாரிகளுக்கு இப்போது அமரபுரம் போனவுடனே முழு விவரங் களையும் தெரிவிப்போம். ஆமாம், மாலாவுடன் கூட நீலாவும் சென்னைக்குப் போவதாக சப்-இன்ஸ் பெக்டர் சொன்னரே என்று கேட்டார் டி. எஸ். பி. ஆமாம். காளை இரவு மாலாவுடன் நீலாவும் போகிருள்” என்ருர் பரமசிவம் பிள்ளை.

பரிசுத் தொகையான ரூபாய் ஐயாயிரத்தை யும் உடனே கிடைக்க ஏற்பாடு செய்கிறேன். கதையை எழுதிய நீலாவுக்கும், நாடகமாக்கிய மர்லாவுக்கும் பரிசுத் தொகையைப் பங்கிட்டுக் கொடுக்கச் சொல்வார்கள் என்றுதான் நான் கினைக் கிறேன்.'
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/121&oldid=1021683" இலிருந்து மீள்விக்கப்பட்டது