பக்கம்:நீலா மாலா.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75

75 'போடி, குறும்புக்காரி' என்று கூறிவிட்டு *நீலா, இங்கே வா. ஏன் இப்படி ஒரமாக கிற் கிருய்?’ என்ருள் பார்வதி அம்மாள். உடனே மாலா ஒடிப் போய் நீலாவின் கையைப் பிடித்து இழுத்து வந்தாள். பார்வதி அம்மாள் மாலாவையும் நீலாவையும் அன்போடு அனைத்துக் கொண்டாள். 'அம்மா! நானும் என் அம்மாவும் ஏழையாக இருந்தாலும், எங்கள் மேலே இவ்வளவு பிரியம் வைத்திருக்கிறீர்களே! என் அம்மா அடிக்கடி சொல்லுவார்கள். உன் அப்பா செய்த உதவியும் தியாகமும் வீண்போகாது. கல்லவர்கள் உருவத் திலே வந்து நமக்கு எப்போதும் உதவும் என்று சொல்லுவார்கள். அந்த கல்லவர்கள் நீங்கள்தான்” என்று நன்றியுடன் கூறினுள் நீலா. அப்போது அவள் கண்களில் நீர் நிறைந்தது. 'மாலா, உனக்கு முக்தாம்நாள் உன் தாத்தா வாங்கி வந்தாரே ஒரு பாட்டுப் புத்தகம், அதி லேயிருந்து ஒரு பாட்டை உன் அம்மா கொஞ்ச நேரத்துக்கு முன்னலேதான் படித்துக் காட்டினுள். மாடு செத்தால், அதன் தோலாலே செருப்புத் தைக் கலாம். ஆடு செத்தால், அதன் உரோமத்தாலே கம்பளி செய்யலாம். யானை செத்தால், அதன் தங் தத்தாலே சீப்பு, பொம்மையெல்லாம் செய்யலாம். பாம்பு செத்தால்கூட அதன் தோலாலே மணிபர்ஸ் செய்யலாம்; பெல்ட் செய்யலாம். È i

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/77&oldid=1021629" இலிருந்து மீள்விக்கப்பட்டது