பக்கம்:நீளமூக்கு நெடுமாறன்.pdf/20

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18



கதை : இரண்டு



இளவரசி சந்திரிகா

ழைப்பாளிகள் நிறைந்த ஆரவார நாட்டில் அசமந்தன் என்னும் மகாராஜாவும் அகங்காரவல்லபி. என்னும் மகாராணியும் அரியணை ஏறினார்கள். அவர்கள் தங்கள் அரசாங்கத்தைச் சரிவர நடத்தாததால் நாட்டிலிருந்து பொதுமக்களால் அவர்கள் விரட்டப்பட்டார்கள்.

அதனால் அவர்கள் அயல் நாட்டுக்குச் சென்று தங்கள் முடியையும், ஆடை ஆபரணங்களையும் விற்றுச் சாப்பிட்டு வரலானார்கள். கடைசியில் எல்லாம் தீர்ந்துவிட்டது. அப்போது அசமந்த மகாராஜா அகங்காரவல்லபியைப் பார்த்து, "நாம் நாடு கடத்தப்பட்டு எவ்விதமான ஆதரவுமின்றி