பக்கம்:நீளமூக்கு நெடுமாறன்.pdf/23

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

21

பேசிக்கொண்டதை நீ ஒட்டுக் கேட்டுவிட்டாய். அவர்கள் உன்னையும், உன் அக்காமாரையும் திரும்பி வர முடியாத தொலை து ரத்தில் கொண்டு போய்விடப் போகிறார்கள். இதோ இந்த நூற்கண்டை எடுத்துக்கொள். இந்த நூல் எப்போதும் அறுந்து போகாது. உன் சிற்ற்ன்னை உங்களை வீட்டிலிருந்து அழைத்துச் செல்லும்போது இந்த நூலின் ஒரு நுனியை உன் வீட்டு வாசல் கதவில் முடிந்து விை. போகும் வழியில் நூலை விட்டுக்கொண்டே போ திரும்பவும் எளிதாக வழி கண்டுபிடித்து விடலாம்” என்று அந்த தேவதை சொன்னாள்.

பிறகு அத்தேவதை ஒரு நூல் கண்டுடன், பொன்னும் வெள்ளியும் இழைத்து நெய்த ஆடைகளைப் பரிசாகக் கொடுத்து முத்தமிட்டு சந்திரிகாவை மறுபடியும் குதிரையில் ஏற்றிவிட்டாள் குதிரை சில நிமிடங்களில் அவளை அவர்கள் தங்கியிருந்த குடிசைக்கு அருகில் கொண்டுவந்து விட்டுவிட்டது. அன்று இரவு சந்திரிகா தனக்கு தேவதை கொடுத்த வெகுமதிகளைத் தலையணையின் கிழே வைத்துக் கொண்டு படுத்து உறங்கினாள். என்ன நடந்த தென்று அவள் யாருக்கும் சொல்லவில்லை.

மறு நாள் பொழுது விடிந்தவுடன் அகங்கார வல்லபி தன் ஆடைகளை அணிந்து கொண்டு, பெண்களைக் கூப்பிட்டாள்.

முதலில் அசமந்த மகாராஜாவி ன் மூத்த மகளான காந்தாரி வந்தாள். அடுத்தாற்போல் அடுத்த மகளான மங்கள நாயகி வந்தாள். பிறகு கடைசி மகளான சந்திரிகா வந்தாள்.

“அடி பெண்களே! நேற்று இரவு நான் ஒரு கனவு கண்டேன். அதன்படி என் அக்காள் வீட்டிற்கு நாம் போகவேண்டும். அவள் நம்மை வரவேற்றுபசரித்து நமக்கு நல்ல விருந்து வைப்பாள்!" என்று சொன்னாள் அகங்காரவல்லபி.