பக்கம்:நீளமூக்கு நெடுமாறன்.pdf/36

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

விருந்திற்கு வந்திருந்த அவளுடைய சகோதரிகள் அவளை அடையாளம் கண்டு கொள்ளவில்லை. விருந்துக்கு வந்திருந்த எல்லோருடைய கண்களும் சந்திரிகாவின் மேலேயே பதிந்திருந்தன. விருந்து நடத்திய வீட்டுக்காரி அவளை வரவேற்று உபசரித்து, அவள் பெயரைக் கூறும்படி கெஞ்சிக்கேட்டுக் கொண்டாள். அதற்கு சந்திரிகா, தன் பெயர் சுந்தரியென்று மாற்றிச் சொன்னாள். அவளுடைய சகோதரிகளுங்கூட அவள் மீது பொறாமை கொண்ட போதிலும் மற்றவர்கள் போலவே அவளைப் புகழ்ந்து பாராட்டிப் பேசினார்கள். அவள் யார் என்று அவர்கள் தெரிந்து கொள்ளவேயில்லை.

விருந்து ஆ அவர்களுக்கு முன்னாலேயே சந்திரிகா தன் வீட்டுக்குத் திரும்பி வந்து விட்டாள். அக்காள்கள் இருவரும் விட்டுக்குத் திரும்பி வந்தவுடன், சந்திரிகாவிடமே "அடியே சந்திரிகா, இன்று நாங்கள் ஓர் அழகான இளவரசியைப் பார்த்தோம். அவள் பெயர் சுந்தரியாம்! அவளது உடல் பணிபோல் வெண்மையாயிருந்தது. அவள் கன்னங்கள் ரோஜாப் பூப்போல் சிவந்திருந்தன உன்னைப் போல் ஒர் அவலட்சண மனிதக் குரங்காக அவள் இல்லை. அவள் எவ்வளவு அழகாக இருந்தாள்! அவள் அணிந்திருந்த பொன்னும் வைரமும்தான் அவள் உடம்புக்கு எவ்வளவு அழகாக இருந்தன!” என்று புகழ்ந்து சொன்னார்கள்.

"நான் அப்படித்தான் இருந்தேன்!” என்று தன் வாய்க்குள் சொல்லிக் கொண்டாள் சந்திரிகா.

"என்ன முணு முணுக்கிறாய்?" என்று அவர்கள் கேட்டதற்கு சந்திரிகா, "ஒன்றுமில்லை" என்று சொல்லி விட்டாள். ஒவ்வொ நாளும் அவள் புதுப்புது ஆடைகளையும் அணிகளையும் எடுத்து அணிந்து கொண்டு தன் சகோதரிகள் அறியாமலேயே விருந்துக்குப் போய் வந்தாள். ஒருநாள் அவள் தன் சகோதரிக்ளுக்கு முன்னால் வீட்டுக்கு வந்துவிட