பக்கம்:நீளமூக்கு நெடுமாறன்.pdf/42

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40




இளவரசன் சுந்தராங்கதனைத் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று அவளிடம் எல்லோரும் கேட்டுக் கொண்டார்கள்.

"முதலில் என் கதையைக் கேளுங்கள்” என்று சந்திரிகா தன் வரலாற்றைச் சொன்னாள். அவள் அரச குலத்தில் பிறந்த ஒர் இளவரசி என்பதையறிந்ததும், இளவரசனின் பெற்றோர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள். அவளுடைய தந்தையின் நாட்டை அந்த அரசர்தான் ஆண்டு வந்தார். அந்த நாட்டை தன் தந்தைக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டுமென்று சந்திரிகா கேட்டுக் கொண்டாள். அதற்கு அவர்கள் ஒப்புக் கொண்ட பிறகு அவளும் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டாள்.

அந்தச் சமயத்தில் சந்திரிகாவின் சகோதரிகளான காந்தாரியும் மங்கள நாயகியும் அங்கு வந்து சேர்ந்தார்கள். சந்திரிகாவின் காலுக்கு அந்தச் செருப்பு சரியாக இருந்தது என்பதையும் அவள் இளவரசனைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறாள் என்பதையும் கேட்டவுடனே அவர்கள் அங்கிருந்து நழுவத் தொடங்கினார்கள். ஆனால்,