பக்கம்:நீளமூக்கு நெடுமாறன்.pdf/60

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

பார்த்துக் கொண்டிருந்த அவனுடைய இரண்டாவது மகன் அப்போது திடீரென்று கூச்சலிட்டுக் கொண்டு ஒடி வந்தான். "அப்பா, அப்பா! அரக்கன் மலையில் இருந்து இறங்கி வருகிறான் கையில் தண்டாயுதத்தோடு அவன் வந்து கொண்டிருக்கிறான்!” என்று கூவி க் கொண்டே ஓடி வந்தான்.

"சிக்கிரம் சிக்கிரம் சிறிதும் தாமதிக்காமல் எல்லோரும் புறப்படுங்கள்!” என்று சொல்லி சமயோசிதம் தன் மனைவியையும் பிள்ளைகளையும் வீட்டுக்குப் பின்னால் இருந்த வைக்கோல் போருக்கு சென்றான். வைக்கோல் போரின் அடியில் எல்லோரையும் ஒளிந்து கொள்ளச் சொன்னான். அவர்கள் எல்லோரும் சரியாக நுழைந்து விட்டார்களா என்று எண்ணிக் கொண்டான். ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு ஆனவுடன் சமயோசிதமும் ஒன்பதாவதாக நுழைந்து கொண்டு வெளியில் மேலும் கொஞ்சம் வைக்கோலை இழுத்து விட்டு வழி தெரியாமல் மறைத்து விட்டான். அங்கே அவர்கள் பயந்து நடுநடுங்கிக் கொண்டு அரக்கன் வந்து போவதற்காகக் காத்திருந்தார்கள்.

மலையிலிருந்து அரக்கன் பிரசண்டன் இறங்கி வந்தான். தோட்டக்காரன் வீட்டைத் தட்டிப் பார்த்தான். பதிலில்லை. தன் கையிலிருந்த தண்டாயுதத்தால் கதவை இடித்தான். பலனில்லை. வீட்டு ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தான். அதன் பிறகு தான் வீடு வெளியில் பூட்டியிருப்பதைக் கவனித்தான். அரக்கனுக்கு ஒரே கோபமாக வந்தது. "நாளை வந்து பார்த்துக் கொள்கிறேன்” என்று கத்தி விட்டுத் திரும்பினான்.

திரும்பிப் போகும்போது, தோட்டக்காரனுடைய பிள்ளை குட்டிகள் யாராவது தட்டுப்படுகிறார்களா என்று அரக்கன் சுற்றுமுற்றும் நோக்கினான். மாட்டுக் கொட்டகையில் கட்டிக் கிடந்த பசு மாட்டைத் தவிர வேறு ஒர் உயிர்ப் பிராணியைக் கூட அவன் காண