பக்கம்:நீளமூக்கு நெடுமாறன்.pdf/62

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

துண்டாக்கித் தன் மனைவியிடம் கொடுத்தான். அதன் குடல் பை ஒன்றிலே அதன் இரத்தத்தைப் பிடித்து நிரப்பி வைத்தான். பிறகு இருட்டு வந்தவுடன் எல்லோரும் பேசாமல் படுத்துத் தூங்கிவிட்டார்கள்.

பக்கத்தூர்ச் சந்தையில் போய் அந்த மாட்டுத் தோலை விற்று விட்டு வருவதற்காக நள்ளிரவிலே வீட்டை விட்டுப் புறப்பட்டான் சமயோசிதம். தோளில் மாட்டுத் தோலைப் போட்டுக் கொண்டு இருட்டிலே அவன் போய்க் கொண்டேயிருந்தபோது, பின்னால் யாராரோ விரைந்து நடந்து வரும் ஒசையும் பேச்சுக் குரலும் அவன் காதில் விழுந்தன. அவர்கள் திருடர்களாக இருக்கக் கூடும் என்று பயந்து அவன் பக்கத்தில் இருந்த மரம் ஒன்றிலே ஏறி உட்கார்ந்து அந்தமாட்டுத் தோலைக் கொண்டு தன் உடலைப் போர்த்திக் கொண்டான். அவர்கள் தன்னைக் கடந்து போன பின் கீழே இறங்கலாம் என்று அவன் எண்ணியிருந்தான்.

ஆனால் அவன் மறைந்திருந்த மரத்தின் அடியிலேயே அவர்கள் வந்து கூடினார்கள். அங்கு கூடிய நான்கு பேரும் நான்கு சாக்குப் பைகளிலே ஏதோ கொண்டு வந்து தரையில் கொட்டினார்கள். பிறகு ஒருவன் கையில் கொண்டு வந்திருந்த லாந்தர் விளக்கை ஏற்றினான். கீழே கொட்டிய தங்க நாணயங்கள் முழுக்க அந்த ளக்கு வெளிச்சத்தில் மின்னின. அவர்கள் அந்த நாணயங்களைத் தங்களுக்குள் பங்கு வைத்துக் கொண்டிருந்தார்கள்.

அவர்கள் திருடர்கள் தாம் என்று உறுதியாகத் தெரிந்தவுடனே சமயோசிதத்தின் உடலெல்லாம் வெட வெட வென்று நடுங்கியது. அந்த நடுக்கத்தில் மரக் கிளையாடி இலைகள் ஒன்றுடன் ஒன்று உராய்ந்து, பயங்கரமான சலசலப்பை உண்டாக்கின. அவன் பற்களும் கிடுகிடுவென்று தந்தியடித்தன.

இந்த ஒசைகளைக் கேட்ட திருடர்கள் மேலே நிமிர்ந்து பார்த்தார்கள். அவர்களிலே ஒருவன் "யார்