பக்கம்:நீளமூக்கு நெடுமாறன்.pdf/75

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

73



மலையடிவாரத்தில், தோட்டக்காரன் சமயோசிதம் அப்போதுதான் மத்தியானச் சாப்பாட்டை முடித்து விட்டு, அன்று அவன் மனைவி அவனுக்காக வைத்திருந்த பாயாசத்தை அருந்திக் கொண்டிருந்தான். அந்தச் சமயத்தில் அரக்கன் பிரசண்டனும் அவன் வேலைக்காரனும் ஆத்திரத்தோடு கிழே இறங்கி வந்து கொண்டிருந்தார்கள். இந்தச் சமயம் எல்லோருக்கும் கடைசியான நான்காவது பெண் குழந்தை மலைப் பக்கத்தைக் கவனித்துக் காவல் செய்து கொண்டிருந்தாள். அவள் அரக்கனும் அவனுடைய வேலைக்காரனும் இறங்கி வருவதைக் கண்டதும் பயந்து கிச்சுக்குரலில் கத்திக் கொண்டு வைக்கோல் போருக்குக் கீழே போய் மறைந்து கொண்டாள். அவளுடைய கிச்சுக்குரல் சமயோசிதத்தின் காதில் விழவில்லை.

ஆகவே, இந்தச் சமயம் யோசனை செய்வதற்கு நேரமும் வாய்ப்பும் இல்லாதவகையில் சமயோசிதம் அரக்கனிடம் மாட்டிக் கொண்டான். எப்போதும் அதிர்ஷ்டம் ஒருவனுக்கு துணையிருக்க முடியாது என்பது அப்போது மெய்யாகி விட்டது. அரக்கன் அப்படியே சமயோசிதத்தின் குடுமியைப் பிடித்துத் துாக்கி தன் வேலைக்காரன் திறந்து பிடித்துக் கொண்டிருந்த சாக்குக்குள் அவனைப் போட்டான். பிறகு வேலைக்காரன் சாக்குப் பையின் வாயைக் கட்டித் தன் தோள்மீது தூக்கிக் கொண்டான்.

சாக்குப் பைக்குள் இருந்த சமயோசிதத்தைத் தூக்கிக் கொண்டு அரக்கனும் அவனுடைய வேலைக்காரனும் ஆற்றுக்குப் போனார்கள். ஆறு இரண்டு மைல் துரத்தில் இருந்தது. அப்போது மத்தியான நேரமாக இருந்தபடியால் வெயிலும் அதிக வெப்பமாக இருந்தது. வழியில் ஒரு கள்ளுக்கடை தென்பட்டது. அந்தக் கள்ளுக்கடை வாசலுக்கு வந்தவுடன், அரக்கன் பிரசண்டன் சாக்கை இறக்கிக் கிழே வைக்கும் படி வேலைக்காரனுக்கு