பக்கம்:நீளமூக்கு நெடுமாறன்.pdf/80

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

உன்னை ஆற்றில் போட்டு விட்டு வந்தேன்?" என்று கேட்டான்.

"ஆமாம்; பெருந்தலைப் பிரசண்டரே! நீங்கள் என்னை ஆற்றில் போட்டது உண்மைதான். அதற்காக நான் உங்களுக்கு நன்றி செலுத்தக் கடமைப் பட்டிருக்கிறேன். பார்த்திர்களா, நான் ஆற்றின் அடியில். கண்டெடுத்த பொருள்களை! இவ்வளவு வியாபாரப் பொருள்களும், இவற்றைச் சுமக்கப் பன்னிரண்டு கழுதைகளும் எனக்கு அங்கே கிடைத்தன” என்றான் சமயோசிதம்.

'நீ ஓர் அதிர்ஷ்டக்காரன் என்பதில் சந்தேகமேயில்லை. ஆற்றின் அடியில் இவ்வளவு பொருள்கள் தான் இருந்தனவா? இல்லை, இன்னும் இருக்கின்றனவா?" என்று கேட்டான் அரக்கன்.

'இன்னும் ஏராளமான பொருள்கள் இருக்கின்றன. இவற்றைக் காட்டிலும் உயர்ந்த பொருள்கள் அவை. அத்தனையும் அசல்:வைரத்தினாலும் தங்கத்தினாலும் செய்யப்பட்டவை.ஆனால், என்னைப் போன்ற ஒர் ஏழைத் தோட்டக்காரன் அப்படிப்பட்டதங்கத்தையும் வைரத்தையும்-வியாபாரம் செய்யவந்தால் அது சந்தேகத்திற்கிடமாகக் கூடும். நான் அவற்றைத் திருடிக்கொண்டு வந்திருப்பதாக எண்ணி அரச காவலர்பிடித்துக் கொண்டு போனாலும் போய்விடலாம்.அதற்காகத் தான் இந்த சாதாரணப் பொருட்களைமட்டும் அள்ளிக் கொண்டு வந்தேன்!” என்றுவகையாகப் பொய் சொன்னான் சமயோசிதம்.

"ஆம் ஆம் நீ செய்தது புத்திசாலித்தனமான காரியம்தான்!” என்று சொன்ன அரக்கன் தன் வேலைக்காரனை இழுத்துக் கொண்டு வந்த வழியே திரும்பலானான். "ஏ மரமண்டையே திரும்பிவா. உன்