பக்கம்:நீளமூக்கு நெடுமாறன்.pdf/87

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

85


பிறகு அவள் ஒரு தூதனை அழைத்து அவளிடம், "நீ ராஜாவிடம் சென்று ராணிக்கு ஒரு சிங்கக் குட்டியும் முதலையும் பிறந்திருப்பதாகச் சொல்லிவிட்டு வா. அவருடைய பதிலை என்னிடம் கொண்டு வந்து கொடு" என்று சொல்லியனுப்பினாள்.

தூதன் அவள் சொன்னபடியே செய்தான். ராஜா தேவப்பிரியன் போராடிக் கொண்டிருந்த இடத்திற்குச் சென்று, இந்தச் செய்தியைக் கூறினான். தன் மனைவியிடமிருந்து தான், அவன் செய்தி கொண்டு வந்திருக்கிறான் என்று எண்ணிய தேவப்பிரியன் ஆறாத் துயரமடைந்தான். அவன் முகம் துயரத்தால் வெளுத்தது.

'இது ஏதோ மாயாஜாலமாய் இருக்கிறது! இல்லாவி ட்டால் எனக்குக் குழந்தைகளாகச் சிங்கக்குட்டியும் முதலையும் ஏன் பிறக்க வேண்டும்?" என்று நினைத்துக் கொண்டான். பிறகு அவன் தூதன்னைப் பார்த்து "நீ திரும்பிப் போய், ரர்ணியிடம் நான் வரும் வரை இது சம்பந்தமாக எதுவும் செய்ய வேண்டாமென்று சொல்” என்று சொல்லி அனுப்பினான்.

தூதன் அரண்மனைக்குத் திரும்பி வந்து ராஜாவின் சிற்றன்னையிடம் இந்தச் செய்தியைக் கூறினான். அதைக் கேட்டு, பானுமதி அகமகிழ்ந்து அத்துTதனுக்கு பொன் முடிப்பு ஒன்றைப் பரிசாகக் கொடுத்து "செத்தாலும் இந்த ராஜ்யத்திற்குள் திரும்பி வராதே. வேறு எந்த நாட்டிற்காவது போய்விடு” என்று சொல்லியனுப்பி விட்டாள். பிறகு அவள் ராணி கோமளாவிடம் சென்றாள். கோமளா அப்போது தன் இரு குழந்தைகளையும் மடியில் வைத்து இன்பமாகக் கொஞ்சிக் கொண்டிருந்தாள்.

"ஐயோ! இந்த அநியாயத்தை என்னென்று சொல்வேன்!" என்று கூவிக் கொண்டே , பானுமதி ஒரு சூழ்ச்சித் திட்டத்துடன் அங்கே வந்தாள். "ஐயோ பாவம் பெண்ணே, உன் செய்தியைக் கேட்ட அரசர்