பக்கம்:நீளமூக்கு நெடுமாறன்.pdf/91

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

89

ஒரு கூடையில் பச்சைக் குழந்தைகளாக நீங்கள் படுத்திருந்திர்கள். பொன்னால் இழைத்த பட்டுத் துணியால் சுற்றி மூடப்பட்டிருந்த உங்களை நான் கண்டெடுத்தேன். அதன் பின் உங்களை என் சொந்தக் குழந்தைகளைப் போல் வளர்த்து வந்தேன். ஆனால் இன்று வறுமையின் கொடுமையினால் தான் உங்களைப் பிரிய ஒப்புக் கொள்ளுகிறேன்” என்று சொல்லிக் கண்ணிர் விட்டான்.

மறுநாள் காலையில் செம்படவனிடமும், அவன் மனைவியிடமும் சொல்லிக் கொண்டு இரட்டைக் குழந்தைகள் வீட்டை விட்டுப் புறப்பட்டார்கள். அவர்கள் இருவரும் கை கோர்த்துக் கொண்டு கடற்கரையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தார்கள். திடீரென்று சின்ன இளவரசி, "அண்ணா, கவனி என் காதில் ஒரு குரல் கேட்கிறது” என்று சொன்னாள்.

உடனே அவர்கள் இருவரும் அந்த இடத்திலேயே நின்று கவனித்தார்கள். கடல் தான் அவர்களை நோக்கி பாடிக் கொண்டிருந்தது. "இளவரசே, இளவரசே, சின்ன இளவரசே! இளவரசி, இளவரசி, சின்ன இளவரசி! பூக்களைப் போல் அழகான பொன்னான குழந்தைகளே! செல்லுங்கள், செல்லுங்கள் நடந்து கொண்டே செல்லுங்கள்! ஆடுகின்ற மாம்பழமும், உண்மை அறிந்துரைக்கும் பறவை ஒன்றும் தெரிகின்ற வரை நீங்கள் சென்று கொண்டே இருப்பீரே!" என்று அந்தக் கடல் பாடியது.

அதன்படியே அவர்கள் இருவரும் நடந்து சென்று கொண்டேயிருந்தார்கள். மூன்று பகலும் மூன்று இரவுகளும் அவர்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தார்கள். பிறகு களைப்பாறுவதற்காகக் கடற்கரை யோரத்திலிருந்த ஒரு மரத்தடியில் அவர்கள் தங்கினார்கள். கிழே படுத்திருந்த இளவரசி மேலேயிருந்த மரக்கிளைகளை நோக்கினாள். "அண்ணா அதோ பார்! இந்த மரத்தின் உச்சிக்கிளையில் ஒரு மாம்பழம் இருக்கிறது!. இரத்தம்