பக்கம்:நீளமூக்கு நெடுமாறன்.pdf/93

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

91


ராஜாவின் கட்டளைப்படி குழந்தைகள் இருவரும் சாப்பிட்டு முடிந்தவுடன், தாங்கள் ராஜாவை நேரில் பார்த்து நன்றி சொல்ல விரும்புவதாகத் தெரிவித்தார்கள். ராஜா அதற்கு அனுமதி கொடுத்ததும் அவர்கள் தர்பார் மண்டபத்திற்குள் அனுமதிக்கப்பட்டார்கள். அங்கே ராஜா தன் சிற்றன்னையுடன் சிங்காதனத்தில் உட்கார்ந்திருந்தான். அவன் அக்குழந்தைகளை இரக்கத்துடன் நோக்கினான். "சின்னக் குழந்தைகளே! இவ்வளவு சின்ன வயதில் நீங்கள் தன்னந்தனியாக உலகத்தில் அலைந்து கொண்டிருக்கிறீர்க்ளே!” என்று ராஜர் தேவப்பிரியன் பரிதாபத்தோடு கூறினான்.

"மேன்மை தாங்கிய மகாராஜா! எங்களுடைய வளர்ப்புத் தாய் தந்தையர் வயது முதிர்ந்த காலத்தில் வசதியாக வாழ வேண்டும் என்பதற்காகச் செல்வம் தேடிப் புறப்பட்டோம். ஏழு வருடங்களுக்கு முன்னால் நாங்கள் இருவரும் பொன்னாலிழைத்த பட்டுத் துணியில் சுற்றப்பட்டு ஒரு கூடையில் படுத்துக் கொண்டு கடலில் மிதந்தபோது எங்களைக் கண்டெடுத்தார்கள். அன்று முதல் அவர்கள் எங்களை அன்பாக வளர்த்தார்கள். இப்போது எங்களுடன் ஆடுகின்ற மாம்பழம் ஒன்றும் உண்மை அறிந்துரைக்கும் பறவை ஒன்றும் கொண்டு வந்திருக்கிறோம். எங்களைக் கடலில் தூக்கி எறிந்தவனை நாங்கள் காணும்போது இந்த மாம்பழம் அவனைக் காட்டிக் கொடுத்து விடும். இந்தப் பறவை உண்மையைச் சொல்லிவிடும்!” என்றார்கள்.

இதைக் கேட்ட ராஜாவின் உள்ளம் இளகியது; ஏழு ஆண்டுகளுக்கு முன்னால், பூக்களைப் போல் அழகான என் குழந்தைகள், ஒரு சின்ன இளவரசனும், ஒரு சின்ன இளவரசியும் அவர்களுடைய கொடிய தாயினால் கடலிலே துாக்கி எறியப்பட்டார்கள். அக்குழந்தைகள் தாம் நீங்கள் என்றால், உங்களிடம் இருக்கும் ஆடுகின்ற மாம்பழமும் உண்மை அறிந்துரைக்கும் பறவையும் உங்களைக் கொலை-