பக்கம்:நீளமூக்கு நெடுமாறன்.pdf/95

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

93

வியர்த்துக் கொட்ட, எழுந்து நின்று தன் குற்றத்தை ஒப்புக் கொண்டாள். மன்னிக்க வேண்டும் என்று மன்றாடிக் கேட்டுக் கொண்டாள்.

"உனக்கு எப்படி மன்னிப்புக் கொடுக்க முடியும்?" என்று கேட்டான் ராஜா தேவப்பிரியன்.

தன் சிற்றன்னையைப் பார்க்க பிடிக்காமல் முகத்தைத் திருப்பிய ராஜா, அங்கே தன் அன்பு மனைவி கோமளா நிற்பதைக் கண்டான். உடனே சிங்காதனத்தை விட்டு எழுந்து ஓடி அவளை அன்போடு பற்றிக் கொண்டான். பிறகு இருவரும் தங்கள் இரண்டு குழந்தைகளையும் தூக்கித் தோள் மேல் வைத்துக் கொண்டு முத்தமிட்டுக் கொஞ்சிக் கொஞ்சி மகிழ்ந்தார்கள். அவர்கள் நான்கு ப்ேரும் அட்ைந்த இன் பத்திற்கிடான இன்பத்தை இந்த உலகத்தில் வேறுயாரும் அடைந்திருக்கவே முடியாது.

ராஜா தேவப்பிரியன் தன் சிற்றன்னையைத் "திரும்பி வராதே" என்று சொல்லிக் கோட்டையை விட்டு விரட்டி விட்டான். அவளுடைய அதிகாரமும் ஆடம்பரமும் அடியோடு அழிந்து போயிற்று!

தன் குழந்தைகளை அன்போடு ஏழு ஆண்டுகள் ஆதரித்து வளர்த்த செம்படவக் கிழவனையும், அவன் மனைவியையும் அரண்மனைக்குக் கூட்டிக் கொண்டு வந்து அவர்கள் காலம் முழுவதும் அங்கேயே வசதியாக வாழ்ந்து வரும்படிச் செய்தான் ராஜா.

பூக்களைப் போன்ற அழகுடைய சின்ன இளவரசனும் சின்ன இளவரசியும் தங்கள் பெற்றோர்க்ளுடனும் வளர்ப்புத் தாய் தந்தையருடனும் ஆனந்தமாக வாழ்ந்தார்கள்.

முற்றிற்று.