பக்கம்:நீ சிரித்த வேளை.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை திரு பூவை எஸ். ஆறுமுகம் சிறந்த எழுத்தாளர். ஏறத்தாழ 45 ஆண்டுகளாக எழுதிவருபவர். சிறுகதை, புதினம், நாடகம், இசைப்பாடல்கள் எழுதுவதில் தனக்கெனத் தனி முத்திரை பதித்தவர். அவர் பத்திரிகையாளராகவும், ஆசிரியராகவும் திகழ்ந்தவர். 'பொன்னி இதழில் அவர் ஆற்றிய பணியை இன்றளவும் அனைவரும் நினைவில் கொண்டு பாராட்டி வருகிறார்கள். எழுபது ஆண்டுகள் நிறைவெய்திய, எழுத்துச் செம்மலின், சிறந்த புதினம் 'நீ வந்த வேளை’. பிரச்னைக்குரிய புதினம் இது. - இந்தப் புதினத்தை, மகாகவி பதிபகத்தின் நூலாக வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறோம். எழுபது நிறைந்த எழுத்தாளர் அன்பர் பூவை எஸ். ஆறுமுகம் பல்லாண்டுகள் வாழ்ந்து தமிழ் மொழிக்குப் பல படைப்புகளை வழங்க வாழ்த்துகிறோம். சென்னை - 33 விக்கிரமன் 20.12.96 - (மகாகவி பதிப்பகம்)