பக்கம்:நீ சிரித்த வேளை.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

பூவை எஸ். ஆறுமுகம்



மருமகள் ஊர்வசியையும் மனப்பூர்வமாக ஆசீர்வதித்து, எங்கள் கல்யாணத்தை நடத்தி வைக்கும் படி கேட்டுக் கொள்கிறேன். தாங்கள் அனுப்பின புகைப்படத்தை இத்துடன் திருப்பி அனுப்பியிருக்கிறேன். என் பதில் கடிதம் கண்டு அவ்விடத்தில் வாக்குக் கொடுக்க வேண்டுமென்று முன் கடிதத்தில் தாங்கள் குறிப்பிட்டது நல்லதாகப் போயிற்று. மற்ற வை நேரில். இப்படிக்கு, தங்கள் மைந்தன் ஆ. அம்பலத்தரசன்.' பெட்டியைத் திறந்து அந்த நிழற் படத்தை எடுத்து, அதையும் கடிதத்தாளையும் உறைக்குள் இட்டு முகவரி எழுதி ஒட்டிக்கொண்டு தலைமை அஞ்சல் நிலையத்தை நோக்கிப் புறப்பட்டான் அம்பலத்தரசன். அவன் இல்லாத வேளையில், பூமிநாதன் அவனைத் தேடிச் சென்ற விவரத்தை அவன் எங்ஙனம் அறிவான்?