பக்கம்:நீ சிரித்த வேளை.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 4 கோடை மழை பொழிந்தது: நின்றது. கணப்பித்தம் கணச் சித்தம் கதைதான்! தாய்க்கு தஞ்சாவூருக்கு எழுதிய தபாலைப் போட்டு விட்டு வந்ததில் அம்பலத்தரசன் வெகுவாகக் குதூகலம் அடைந்தான். தான் அதிகார பூர்வமாகச் செய்ய விருக்கின்ற முதற் கடனுக்கு மூலாதாரமாக இருந்த இந்த இரண்டாவது கடமையைக் காலத்தோடு செய்தது அவனுக்கு மன அமைதியைக் கொடுத்தது. அம்மாவின் சம்மதத்தைத் தானாகவே எடுத்துக் கொண்டது, முகூர்த்தத்துக்கு நாள் பார்க்க வேண்டியது, உடன் தஞ்சாவூருக்குப் பயணப்படுவது, அன்னையின் ஆசீர்வாதத்தின் பின் தானும் ஊர்வசியும் புதுமணத் தம்பதியாக ஆவது, பின்னர் தனிக்குடித்தனம் வைப்பது இப்படியாக அவன் தன் எதிர்காலத்தை ஊர்வசியின் பின்னணியில் உல்லாசமாகப் பின்னிய நிலையுடன் நடந்தவன், வழியில் சிங்கிள் காஃபி போட்டுக் கொண்டு மீண்டும் நடைபயின்று, மண்ணடி வீதியில் ஒரு குழாய் ஊது வத்தியும் இரண்டுமுழம் ரோஜாவும் வாங்கியவனாக அறையை அடைந்தான் அவன். வழியில் தென்பட்ட மினர்வாப் பட விளம்பரத்தைக் கண்டான்; வாழ்க்கை ஒரு செஸ் விளையாட்டு' என்ற அந்த ஆட்டத்துக்குக் காலைக் காட்சி பார்ப்பதற்குத் தானும் ஊர்வசியும் புறப்பட வேண்டும் என்ற எண்ணத்தின் நெருக்கமான ஆசையையும் நெஞ்சில் நினைவால் எழுதி ரசித்தவனாக, அறையில் பிரவேசித்த உன்னத நிலையையும் அவன் மறந்து விட முடியாது, - * ஆகவே, அவன் ஊர்வசியின் சிந்துரப் பாதங்களை எதிர் நோக்கிக் காத்திருந்தான். பூப்பொட்டணம் மேஜையின் நடுவில் மணத்தது. அவன் மனக் கண்ணில் ஊர்வசியின் பூச்சூடிய கூந்தல் அழகு காட்டியது! - - "லார்’ என்ற புதிய குரல் கேட்டது.