பக்கம்:நீ சிரித்த வேளை.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

பூவை எஸ். ஆறுமுகம்



அறிமுகமில்லாத ஒருவரும், பெண் ஒருத்தியும் குழந்தையோடு வந்து நின்றதைக் கண்டான் அம்பலத்தரசன். அவர்களுக்கு முகமன் மொழிந்தான். பாயை விரித்தான். "நீங்கதானே மிஸ்டர் அம்பலத்தரசன்?" "ஆமாங்க!” . . . "உங்களைச் சும்மா பார்த்திட்டுப்போகத்தான் வந்தோம். என் பெயர் மகாலிங்கம், இவள் என் மனைவி. பெயர் மலர்விழி. இது எங்க குழந்தை. ஊர்வசிக்கு நேர்ந்த துர்ப்பாக்கியத்தைப் போல் இவளுக்கும் ஏற்பட்டு, இவள் என்னை அடைக்கலம் அடைஞ்சாள். இவளை ஏற்றுக்கிட்டேன். பெண்கள் அபலைகளாக ஆகும்போது, தங்களையும் மீறி இப்படிப்பட்ட துரதிஷ்டங்களைச் சந்திக்க நேரிடும்போது, இதயமுள்ள நம் மனிதர்கள் மாதிரி முன்வந்து அவங்களுக்குத் துணை நிற்க வேணும். இதுதான் படைப்புச் சக்தி உலகத்துக்கு இட்டிருக்கூடிய கட்டளை. உங்க நல்லெண்ணத்தை ஊர்வசி குடியிருக்கிற அடுத்த போர்ஷன்காரர் என்கிட்டே சொன்னார். அதான் உங்களைப் பார்த்திட்டுப் போக வந்தோம்!..." - - - உங்க அன்புக்கு மெத்த நன்றிங்க ஐயா... உலகத்திலே நாம் அவதரித்த கடமைக்கு நம்மாலான கடமைகளை எல்லா எதிர்ப்புக்களையும் சமாளிச்சு, எதிர் நீச்சல் போட்டுக்கிட்டு செய்கிறதுக்கு நாம் எப்பவும் ரெடியாய் இருக்கவேணும். நாம் பிறரை நேசித்தால், நம்மைப் பகவான் நேசிப்பார் என்கிறதுதானே தத்துவம்?..." "முக்காலும் உண்மைங்க..." . . . . . . . . . . . . - இருங்க, இதோ வருகிறேன்."என்று சொல்லி பிளாஸ்குடன் புறப்பட்டு, காப்பியுடன் மீண்டான் அம்பலத்தரசன். காப்பிக்கு நன்றி கிடைத்தது. - . குழந்தை பொக்கை வாய்ப் புன்னகையை மீட்டியது. அதற்குக் காப்பியுடன், அன்புப்பாசம் நிரம்பிய முத்தமும் கிடைத்தது. ஆகவே, அது இரட்டிப்புப் புன்னகை சொரிந்தது. "இந்தத் தெய்வத்துக்குப் பெயர்...!"