பக்கம்:நீ சிரித்த வேளை.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீ சிரித்த வேளை I 01 "அங்கயற்கண்ணி!... " என்றாள் மலர்விழி. "பேஷ்!...நல்ல பொருத்தம்!" "மிஸ்டர் அம்பலத்தரசன், உங்களுக்கு மேரேஜ் ஆனதும், ஒருமுறை நீங்க தம்பதிசமேதராக எங்க இல்லத்துக்கு விருந்துக்கு வரவேனும்," என்று சொல்லித் தன் இருப்பிட முகவரி அச்சிட்டப்பட்ட கையடக்கமான அட்டை ஒன்றை நீட்டினார் மகாலிங்கம். சொல்லிக்கொண்டு விடை பெற்றார்கள் அவர்கள். குழந்தை டாடா சொல்லி பூக்கைகளை அசைத்தது. அம்பலத்தரசன் அறைக்குள் நுழைந்து அமரலானான். கீழே காரின் குழல் ஒலி கேட்டது. அம்பலத்தரசனுக்குப் புரிந்துவிட்டது. அதோ, பூமிநாதன் வந்துவிட்டார்! அவன் ஊகம் நூற்றுக்கு நூறு சதவிகிதம் பலிதமடைந்தது. வந்து விட்டான் பூமிநாதன். ஈவினிங் இன் பாரிஸ் வாசம் மூக்கைத் துளைத்தது. மார்னிங் இன் மண்ணடி' என்று ஒரு புது வாசனைத் திரவியம் புழக்கத்தில் இருக்கக் கூடாதா? "வாங்க பூமிநாதன்!" "ஆமாம்," என்று சொல்லியப்படி பொன் நகை ஏந்தி அறையில் நுழைந்தான் பூமிநாதன். அவனுடன் இளம்பரிதிக்கதிர்களும் நுழைந்தன. . - - - "உட்காருங்க, " என்று சொல்லிச் சோபாவைக் காட்டினான் அம்பலத்தரசன். - • . . . . . . . . முகrவரம் செய்திருந்தான் பூமிநாதன். முதுகைச் சாய்த்து. அமர்ந்தான். பவுடர் பூசப்பட்டிருந்த மாநிறக் கன்னங்களில் அங்கங்கே மெல்லிய இழைகளாகக் கீறல்கள் இரண்டொன்று லேசாகத் தெரிந்தன. ஃப்யூஜி வில்க் சட்டை பளபளத்தது. மைனர் சங்கிலி'கழுத்துக்கு வரம்பறுத்திருந்தது. அவன்கழுத்து பத்திரமாகவே இருந்தது. - பூமிநாதனின் மீதிருந்த பார்வையை அழுத்திவிட்டபோது, அவனிடம் நூதனமாறுதல் ஒன்றையும் அம்பலத்தரசன் கவனிக்க