பக்கம்:நீ சிரித்த வேளை.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

பூவை எஸ். ஆறுமுகம்



வேண்டியவன் ஆனான். "ஓஹோ!.... மீசை புதுசு போலிருக்கு! கனஜோராக இருக்குங்க. நாடகத்திற்காக வச்சிருந்த மீசையைச் சாசுவதமாக்கிக் கிட்டீங்க போலே....!" என்றான் அவன், பூமிநாதன் வெட்கத்தோடு சிரித்தான். வெட்கத்திற்கும் ஆண்மை இருந்தது. ஆண்மைக்கும் வெட்கம் புதிதல்ல! ஊதுவத்தியைக் கொளுத்தினான் அம்பலத்தரசன். "ஸ்மெல் பிரமாதமாயிருக்கே!"பூமிநாதன் பாராட்டினான். "தன்னை அழிச்சுக்கிட்டு, இந்த ஊதுவத்தி நமக்கு வாசனை கொடுக்குது!" - "ஆமாம். அதோட தியாகம்தான் இந்த வாசனைக்குத் தத்துவமாய் அமைஞ்சிருக்குது!" "இதேதானே வாழ்க்கைக்கும் தத்துவம்?" "செர்ட்டன்லி... உங்க குறிப்பு அப்பட்டமான உண்மைதான், "நேற்று ராத்திரி உங்களுக்காக வெகுநாழி காத்திருந்தேன். கடைசியிலே ஒரு நண்பரைத் தேடிப் புறப்பட்டேன்." "என்னை மன்னிச்சிடுங்க. உங்களை அநியாயமாய்க் காக்க வச்சிட்டேன்." - "உங்க அப்பாகூட, நீங்க இங்கு வந்தீங்களான்னு என்கிட்டே "ஃபோன் மூலம் விசாரிச்சாங்களே?" "ஒரு அவசர ஜோலியாய் வெளியே போனேன். டயம் ஆயிட்டுது. கொஞ்ச முந்தி நான் உங்களைத் தேடி வந்தேன். இப்போ நான் வந்தது இரண்டாம் தடவை... நேத்தைக்குக் காலையிலே கூட உங்களுக்கு இங்கே ஃபோன் செய்தேன். ரெஸ்பான்ஸ் இல்லை!" - - "அப்படியா? தெரிந்த சிநேகிதியோடு கொஞ்சம் வெளியில் புறப்பட்டுப் போக வேண்டி வந்திட்டுது!" என்று அறிவித்தான் அம்பலத்தரசன். தன்னை பூமிநாதன் ஜாடையாக ஒரக்கண்கொண்டு பார்த்த பாவனையை அம்பலத்தரசனா கவனிக்காமல் இருப்பான்? - பிரிந்து கிடந்த செய்தித்தாளைப் புரட்டினான் பூமிநாதன்,