பக்கம்:நீ சிரித்த வேளை.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீ சிரித்த வேளை

103



கனடாவிடமிருந்து 50 யு.எஸ். சேபர் ' ரக விமானங்களை பாகிஸ்தான் வாங்கியுள்ளது பற்றிய தகவல் பாரதத்துக்குக் கிடைத்து, இவ்விவரத்தை யு.எஸ். சர்க்காரின் கவனத்துக்கு இந்தியா கொண்டுவந்துள்ள விஷயம் தலைப்புச் செய்தியாக விளங்கியது. . பத்திரிகையைப் போட்டுவிட்டு எம்பி உட்கார்ந்தான் பூமிநாதன். அப்போது அவனது சட்டைப் பொத்தான் கழன்றது. அவனது மார்பில் அன்று கண்ட அந்தப் பெரிய ரத்தத் தழும்பு துளியளவு கன்றிப் போய்க் காணப்பட்டது. இக்காட்சி அம்பலத்தரசனை இப்போதும் கவரத் தவறவில்லை. அதே கணத்தில், ஊர்வசியின் மார்பில் தெரிந்த அந்த ரத்தத் தழும்பையும் அவன் தன் நெஞ்சில் ஏற்றிக் கண்டான்!... "சிகரெட் ப்ளீஸ்" என்று உபசரித்து ப்ளேயர்ஸ்' பாக்கெட்டை அம்பலத்தரசனிடம் நீட்டினான் பூமிநாதன். 'பூ' என்ற மோதிர எழுத்து ஒளி வீசியது. "ப்ளீஸ்... எக்ஸ் யூஸ்மி!” "ஏன்?... நீங்கதான் செயின் ஸ்மோக்கராச்சே, அம்பலத்தரசன் "அந்தக் கெட்ட பழக்கம் இன்றையிலேருந்து என்கிட்டே விடை பெற்றிடுச்சு" என்று நிதானமாகச் சொன்னான் அம்பலத்தரசன். "நீங்க பரவாயில்லை: பலகாலப் பழக்கத்தை ஒரு நாளையிலே மாற்றிக்கிட்டுட்டீங்க என்னாலே அப்படிச்செய்ய முடியலை..." கொட்டாவி புறப்பட்டது. "மனம் இருந்தால் மார்க்கம் இல்லாமலா போயிடும்?" "உங்க போக்கே எப்பவும் ஒரு தனி டைப் ஆச்சுங்களே, ஸார்?" என்றான் பூமிநாதன். - இதற்கு விடையாக எதுவும் பேசவில்லை அம்பலத்தரசன். அவன் மனம் தீவிரச் சிந்தனையில் வசப்பட்டிருந்திருக்க வேண்டும்!