பக்கம்:நீ சிரித்த வேளை.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

பூவை எஸ். ஆறுமுகம்



தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு, புகையைக் கக்கிக் கொண்டேயிருந்தான் பூமிநாதன். தலையை நிமிர்த்திக் கொண்டு, தன் உற்ற நண்பனையே உன்னிப்புடன் ஆராய்ந்து கொண்டிருந்தான் அம்பலத்தரசன். அவனது மனத்தின் ஒரு புறத்தில் ஒதுங்கித் துங்கிய வக்கிர புத்தி, விழித்துக் கொண்டது: இந்தக் காலத்திலே யாரை நம்ப முடிகிறது ? கெட்டவர்கள், நல்லவர்களாக வேஷம் போடுகிறார்கள்... இப்படிப்பட்ட சஸ்பென்ஸ்கள் சினிமாவில் ஏராளம் காட்டப்படவில்லையா? வேஷம் போட்டு நடிப்பதிலே இந்தப் பணக்காரர்களுக்கு இருக்கும் வாய்ப்புகள் வேறு யாருக்கும் இருப்பதில்லையே? நேற்றிரவு நான் சந்தித்த கருணாநிதி என்ற ஸ்கூட்டர் ஆசாமி இல்லையா உதாரணத்துக்கு? ஆமாம். இந்தப் பூமிநாதன் மெய்யாகவே நல்லவன் தானா? அப்படியென்றால் அவனுடைய மார்பில் இருக்கும் ரத்தத் தழும்பு எப்படி வந்தது? ஏன் வந்தது? இந்த விசித்திரமான அவசர யுகத்திலே யாரைத்தான் நம்ப முடிகிறது? இன்றைய விபரீதமான நாகரிகம் தான் எந்த ரெளடிக்கும் போர்வையாக அமைந்துவிடக் காத்திருக்கிறதே? ஆமாம், சற்று முன் வந்த அந்தப் புரட்சித் தம்பதியை நான் எப்படி மறப்பேன்? என்னையும் அவர்கள் இனத்தோடு சேர்த்துக் கருதித்தான் என்னைச் சந்திக்க வந்திருக்க வேண்டும்! மலர் விழியைக் கெடுத்த அந்தப் பாவி என்ன ஆனான் என்று கேட்க மறந்துவிட்டேனே....! அதுசரி. என் ஊர்வசியைக் கெடுத்த அந்தப் பாவியை அந்த ரெளடியை அந்த ஸ்கவுண்ட்ரலை எப்படிக் கண்டு பிடிப்பது?... அவனுடைய பற்கள் கூடி விலகிய அரவம் கேட்ட மாத்திரத்தில், அவனை நிமிர்ந்து உற்றுப் பார்க்கலானான் பூமிநாதன். . அம்பலத்தரசனின் விழிக்கரைகளில் சினத்தீ ரத்தம் கட்டியிருந்தது. . . . . - "அம்பலத்தரசன், உங்க மூஞ்சி திடுதிப்பென்று ஏன் இப்படி ஆத்திரம் கக்குகிறது?..." என்று கேட்டான் பூமிநாதன். அவன் பார்வையில் பூப்பொட்டணம் இப்போது தென்பட்டது. "ஒன்றுமில்லை. ஒரு துரோகியைப் பற்றி நெனைச்சேன். வேறொன்றுமில்லை!" - -